02 ஜூலை 2011

பாமரம்..!


செக்கு மாடுதான்

செவிட்டு வாழ்க்கை தான்

சோறும் சுகமும் தான் சொர்கலோகம்..!


உலகமோ நாடோ

உருண்டதோ திரண்டதோ

ஒன்றும் தேவையில்லை..!


இவர்களின் பிரச்சனைகள் தான்

இவர்களுக்கு கிட்டே உள்ள அமுது

எட்டாதது போல்..!


புதுமையைக் கண்டால்

புதிதாய் ஒளியுண்ட கண்கள்

பழமை மீதே பாலம் போட்டு

ஏறி வீறு நடை போடென்ற கோசம்..!


பாபம்…

பசியும் எடுக்காமல்

ருசியும் அறியாமல்

வேகாதவை என்பார்!

வெற்றுக்கூடாய் உலகு விட்டோடும் மனிதர்கள்..!

- ஜே.எம்.பாட்ஷா


என் பால்ய பருவத்தில் (4-1-1994) பாமர மக்களைப் பற்றி எனக்கு அவர்களின் அன்றாட நடைமுறைகளை கவனித்தே இருந்த நிலையில் இவ்வாறு எழுத வைத்தது.


- இன்னும் புரியும்

கருத்துகள் இல்லை: