07 ஜூலை 2011

கழிவறை சுதந்திரம்




பல சந்தர்ப்பங்களில்
என்னை நான்
கண்டுகொள்ள முடிவதில்லை!

என்னோடு நான் பேச
எனக்கொரு இடமுமில்லை!

நடிப்போ பாவங்களோ இன்றி
போலித்திரைகளை களைந்து
சாதாரணமாக நடமாடினாலோ
சமூகம் சாதகமாய் இல்லை!

என்னை மறைத்துத்தான்
வேடம் கட்ட வேண்டி இருக்கிறது!

எதார்த்தம் இவர்களுக்கு எட்டாது..?

கழி(குளி)வறை தரும் சுதந்திரம்
வேறெங்கும் இல்லை..!

அங்கு மட்டுமே
நிஜம் விரிகிறது!
நிம்மதி... யாய்
மூச்சு வருகிறது!


ஜே.எம்.பாட்ஷா

2006 இருக்கும் என நினைக்கிறேன்.. இது எழுதுகையில்


கருத்துகள் இல்லை: