23 ஜூலை 2011

இப்போதைய சத்தியாகிரகம்..!



உலகெங்கும் கவர்ச்சி,

கண்களைத் திறந்தாலே

காமத்தின் வாசல்,

மூக்கின் மொட்டுகளில்

பாலியல் வாசனை,

காதின் பக்கலோ

கேட்கத்தகா சப்தங்கள்,

நாவுகள் அசைகிறது

நாகரீகமில்லா வார்த்தைகளுக்காய்!


உலகில் எங்கனும்

சுகபோக சுவாரஸ்யங்கள்,

மக்களின் நடப்போ

மனோ இச்சையின் வழியில்!


உடலில் துணியோ நேற்றையபழமை,

ஃபேஸன் எனும் போர்வையில்

ஆடைகுறைப்பு அட்டகாசங்கள்,


ஆதி மனிதன் மீண்டும் பூமியில்..!


பாபம் எத்தனை தீர்க்க தரிசிகள்

வந்தாலும் அடங்காத -இவர்களின்

மிருகங்கள் சுதந்திரமாக!


எந்த பெண்ணோடோ எந்த ஆணும் -இது

தற்போது கண்டெடுக்கப்பட்ட

இ-வேல்டு நாகரீகம்


நினைக்கும் நேரம்..

எப்படியும் எங்கேயும்..

ஆனாலும் இவர்களுக்கு ஆறு அறிவாம்.


கேட்டாலோ..?

21ம் நூற்றாண்டு..

குறுகிய வாழ்நாள்

அறிவியியல் யுகம்

வாழ்க்கை வாழ்வதற்கே


இரவு விடுதிகளில்..

கண்ணாற பெண்கண்டு

களைப்பாற தேனுண்டு

ஒய்யாற இடை கோர்த்து

ஓய்வற நடம் நிகழ்த்து..

இவர்களின் முழக்கம்!


பாழாய்போன

திரைச் சேனல்களிலும்..

தரைச் சேனல்களிலும்..

கணினி கர்மங்களிலும்..

முத்தங்களும் முனங்கள்களும்..

சேட்டைகளும் சில்மிசங்களும்..!


இப்போதெல்லாம்

இங்கங்கு என்றிலாது

எங்கனும் பரவிவிட்டது

அயோக்கிய (ஐரோப்பிய) கலாச்சாரம்!


இவற்றிற்கிடையில் தான் -நம்

பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சுகள்

சத்தியாகிரகத்தில்!



-ஜே.எம்.பாட்ஷா



என் மன வேதனையை இரண்டாண்டுக்கு முன் இப்படி காகிதத்தில் கொட்டி வைத்ததை இப்போது அச்சேற்றி இருக்கிறேன்

4 கருத்துகள்:

Reverie சொன்னது…

நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

நல்கிய நல்வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே!

Kousalya Raj சொன்னது…

'இரண்டாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை' இன்று இதை விட மிக மோசமாக உலகம் போய் கொண்டிருக்கிறது என்ற நிதர்சனம் முகத்தில் அறைகிறது...!

கவிதை வரிகள் உங்களின் மனவேதனையை பிரதிபலிக்கிறது

அருமை.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

@Kousalya; கவிஞனுக்கு எப்போது கருத்துக்களை பூட்டிவைக்கத் தெரியாது, முடியாது எப்படியாவது எதிலாவது வெளிக்கொணர்வான்.. மேலே உள்ள கவிதையும் அந்த ரகமே.

மேலும் தளத்திற்கு வந்து கருத்துரை பதிந்ததற்கும், தளத்தில் இணைந்ததற்கும் என் நன்றிகள்..