26 ஜூலை 2011

மயக்க நாழிகைகள்



கன்னி மனம் இரண்டுக்கும்
கல்யாணம் நடந்ததுது..,
மகிழ்ச்சி அலைகள் ஓயாது
மோதி..மோதி.. முட்ட
மணங்கண்ட மனங்கள்
இன்பத்தேன் பருகியே
கனவுக்கடலில் மூல்கி
முத்துக்குளித்துக் கொண்டிருக்கிறது

முதலிரவு முந்திக்கொண்டு வந்தது
அழகான அறையினிலே
அலங்கார கட்டில் அமைத்து..
மணங்கமழும் மல்லிகைகள் பரப்பி..
தோரண மலர்களெல்லாம் தொங்கவிட்டு..
மதுர கனிகொத்துகளுடன் மற்ற இனிப்புகளும்!


மன்னவன் காத்திருக்கிறான்
மாதேவி வரவை பார்த்து!

ஆங்கே.. தோழியரின்
கிண்ணலுக்கும்,,, கூத்துக்கும்.. இடையில்
மணப்பெண்ண்ணுக்கு மறுஅலங்காரம்.

பரிகாசப் பேச்சுககளை
எண்ணி.. எண்ணி..
எண்ணத்தாள் சிரிக்கிறாள் கன்னி..,

என்ன பேசலாம்..
எப்படி துவக்கலாம்.. என்று
சித்தமே சிதறி
இன்னுமா..இன்னுமா..
என்று கைகள் பிசைந்து
கதவிலேயே கண்கள் பதித்தான்,
மாப்பிள்ளை..!

பொறுத்துப் பொருத்துப் பார்த்து
படுத்து உருண்டு எழுந்து
பரிதவித்து உள்ள நிலையில்..!

வெட்கப்பட்டு
சற்றே முனங்குவதாய்
கதவு சத்தமிட
லேசாக திறந்த்தது!

தோழியர் கும்மாளமடித்து
புதுப்பெண்ணை அறை புகுத்து
நன்றாக தாழிட்டனர்!

இன்பதேசம் *போந்து
நாணி.. கூணி..
நடை தளர்ந்து..
நாயகி வருகிறாள்

நாயகனும்
வெட்கத்தை வெளிக்காட்டாது
உதட்டில்
புன்னகை பூத்து
அன்ன நடைபழகும்
சின்ன இடையாளாம்
நாயகியை நோக்கி நெருங்கி
எதிர்கொண்டழைக்க..

சின்ன சிரிப்புடன்
முத்துப்பல் முடி
தனக்குள் சிரித்தும் சிவந்தும்,
அழைப்பிற்கிணங்கி..
அருகில் அணைந்து சாய்ந்து
குழந்தையாகி மயங்கி..
அவளும்..அவனிடம்
சரண்புகுந்து சங்கமித்தாள்!


-ஜே.எம்.பாட்ஷா

-இன்னும் புரியும்


எழுதியது 1997 ஆம் ஆண்டு இப்போது சிறிதே சீர்திருத்தம் செய்தது,
போந்து ; புகுந்து

கருத்துகள் இல்லை: