05 ஜூலை 2011

தரணியாள தயாராவோம்..!
மகிழ்ச்சியின்

கஜானாவை கைப்பற்றுவோம்,

புகழ்ச்சியின்

உச்சியில் கொடிநாட்டுவோம்

சதாவும் உலாவும்

சந்தோசக் காற்றில்

இந்திய தேசத்தின்

இமைகளாக மாறுவோம்!


உழைப்பை ஊன்றி

சுமைகளை வென்று

சுகந்தம் செய்வோம்!


சந்தையை எல்லாம்

சாதகம் ஆக்குவோம்!

கந்தையை கழற்றி

கரிதுடைக்கப் போடுவதுபோல்

முந்தைய சிந்தையை

முந்தாநாளுடன் முடித்துவிட்டு

விந்தை உலகு படைப்போம்!


தரணியாள தயாராவோம்..!

தம்பி வா!

-ஜே.எம்.பாட்ஷா

2001- பிப்ரவரியில் எழுதியது திருச்சியில் டி..எஸ்.எம். சாஃப்ட்-ல் பணிசெய்த போழுதுகளில்..

கருத்துகள் இல்லை: