05 ஜூலை 2011

பிறப்பு ஓர் பிரபஞ்ச அலங்காரம்..!


முகநூலைத் திறந்ததும் வாழ்த்துச்செய்தி பார்க்க வியப்பு தொற்றிக்கொள்ளத்தான் செய்தது..படித்த போது தான் புரிந்தது எனக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று..இந்த மாதம் பிறந்த நாள் என்பது நினைவில் இருந்தாலும் எண்ணத்தை மற்ற எண்ணெற்ற சிந்தனைகள் ஆக்கிரமித்து விடுவதால் பல நேரங்களில் பிறந்தநாள் குறித்து நாம் விழிக்கும் முன்னே அது கடந்திருக்கும்.. ஏதோ முகநூலின் உபயம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ முகநூல் நண்பர்களுக்கு அதன் நினைவூட்டுதலின் பேரில் நமக்கு அவர்களின் வாழ்த்து அறிவுருத்திவிடுகிறது.

நமக்கு பலர் பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார்களே.. அது சரி நாம் ஏன் பிறப்பு சார்ந்த சிந்தனைகளை நம் செய்தியாக வெளியிடக்கூடாது.., அது தான் பதிய பிளாக் இருக்கிறதே.. என்ற எண்ணம் எனக்குள் உதித்ததன் விளைவு தான் இந்த கருத்துக்கள்.
பிறப்பு… ஓர் அபூர்வமான நிகழ்வு.. அசாதாரணமான நிகழ்வு.. பிரபஞ்சம் நம்மை உயர்வாக கவுரவித்ததன் சான்று.. பிறப்பு என்பது இயற்கை நிகழ்வு.. அந்த இயற்கை நிகழ்வுக்குள்ளே எத்தனை எத்தனையோ காரண காரிய முடிச்சுக்கள்.. இயற்கையின் மர்மங்கள்.. இயற்கை நம்மை வெறுமனே பிறப்பித்து விடவில்லை.. அது நம்மை பல தேவைகளின் நிமித்தமே இந்நிலத்தின் கண் நிர்மானித்திருக்கிறது.

ஆணும் பெண்ணும் இணைந்தார்கள்.. அதுவே பிறப்பிற்கு காரணம் என்றால் ஆங்கே ஆணுக்கும்..பெண்ணுக்கும் ஏற்பட்ட சலனமே பிரதானம்! அந்த சலனம் தான் காதலாய்... ஆசையாய்..மோகமாய்..தேடலாய்..கூடலாய்..பரிமாற்றம் காண்டு முடிவில் பிறப்பிற்கு கருவாய் ஆகிறது. இந்த சலனம் பிரபஞ்சத்தின் ஆட்டுவிப்பு, பிரபஞ்சம் நிகழ்த்தும் நாடகத்தின் பாத்திரங்களே ஆணும் பெண்ணும்.. அதன் ஆரம்பம் தான் முத்தக்காட்சிகளும், மெத்தை சம்பவங்களும்.

மனிதனே பிரபஞ்சத்தின் சாற்றை சுமந்து நிற்கும் அதிகாரப்பூர்வ பிரதிநிதி தான்.. குட்டி பிரபஞ்சம்..! ஆம் இவன் அதன் பிள்ளை (வெளிப்பாடு) தான்.. நாம் எல்லோருக்கும் அதுவல்லவோ தாய்.. நாம் பிறக்க ஓர் சலனம் காரணம் என்றால் பிரபஞ்சம் நமது அம்சம் என்றல்லவா கூறுகிறீர் அப்படி என்றால் பிரபஞ்ச பிறப்பு (பிரபஞ்சம் புதிதாய் ஒன்றிலிருந்து பிறப்பதற்கில்லை அதுவே அதனுள் வெளிப்பட்டுக் கொண்ட நிலை.. அல்லது சற்றே மாற்றங்கண்ட நிலை) எப்படி என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.. ஆம் எல்லா மறைகளின் கருத்துப்படி.. தீர்க்கதரிசிகளின் வாக்குப்படி..ஒன்றுமேயாய் இல்லாதிருந்த சலனமற்ற ஒன்றுக்கு ஏற்பட்ட சலனமே.. அதிர்வே.. அசைவே.. ஆசையே.. ஒன்றன் பின் ஒன்றாக பூதங்கள் தோன்ற காரணமாகி கோலங்கள் உண்டாகி.. அதில் சிலவற்றில் உயிர் தோன்றி ஒரு செல்.. இரு செல்.. பல செல்.. முதுகெழும்பு அல்லவை.. உள்ளவை.. ஊர்வன.. பறப்பன.. என்றெல்லாம் படிப்படியாய் மனிதன் வரை வந்தது.. ஆக எல்லாவற்றிற்கும் பிரபஞ்ச சலனமே.. அசைவே.. இதற்கெல்லாம் காரணம்.. அதுவே பின்புலம்..

இயற்கைக்கு தெரியும் யாரை.. யாரிலிருந்து.. எப்போது… எங்கிருந்து… பிறப்பிப்பது என்று. அதனால் தான் எத்தனை எத்தனையோ மனிதர்களை வெளியாக்கிய இயற்கையே அவர்களை வழி நடத்த அவர்களில் தலைவர்களையும் வெளியாக்கியது.. எல்லோருடைய பிறப்புக்களை மாதிரி சிலருடைய பிறப்புக்களை அது வழக்கமான நிகழ்வாக்கவில்லை, அது சிலரை பிரபஞ்ச சக்திகளாலேயே வாழ்த்தப்பட்ட.. தெரிந்தெடுக்கப்பட்ட பிறப்பாக உலகில் முன்னறிவிக்கப்பட்டு.. எதிர்பார்க்கப்பட்டு.. சில பிறப்புக்களை அது நிகழ்த்தத்தான் செய்தது, நபிகள் நாயகம், கிருஸ்து மற்றும் இந்திய திருநாட்டில் வாழ்ந்த அவதாரங்களாக பொருள் கொள்ளப்படும் தீர்க்க தரிசிகளை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக.. நபிகள் நாயகத்தின் வருகையை அறிவிக்காத வேதங்களோ.. உபநிதடங்களோ இல்லை.. அக்காலத்தில் அவர்கள் பிறப்பதற்கு முன்னே பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூத.. கிருத்துவ.. அறிஞர்கள் அவர்களின் வேதங்களின் மூலமாக தெரிந்து தான் வைத்திருந்தனர்.. இந்திய துணைகண்டத்திலும் அதனை பவிஷ்ய புராணங்களும்.., ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும், மகரிஷிகளின் தீர்க்க தரிசனங்களும் சொல்லாமல் இல்லை.. இதை ஆய்வளர்கள் உண்மை படுத்துகின்றனர். இவைகள் எல்லாம் மிகச்சிறந்த பிறப்புக்கள்
சில பிறப்புக்கள் முன்னறிவிப்புக்கள் போன்றவை இல்லாதிருப்பினும் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய அளவு அதிர்வலைகளை ஏற்படுத்தி சென்றிருக்கும் அதன் ஆதிக்கம் எப்போதும் நிலை பெற்று நிற்கும் திருவள்ளுவர், அகத்தியர், புத்தர், போன்ற எத்தனை எத்தனையோ மகா ஆத்மாக்கள்.. இவைகளும் சிறப்பிக்கப்பட்ட பிறப்புக்கள் தான்.. சிறப்பிக்க பட்ட பிறப்புக்கள் என்பதாலேயே இவர்கள் கஷ்டப்படாமல் வாழவில்லை.. மனிதர்களாகத்தான் இவர்களும் வாழ்ந்தார்கள்.. ஆனாலும் மனிதர்களில் இயற்கையாகவே சிந்தனை வீரியமிக்காவர்களாகவும். நெஞ்சுரம் மிக்கவர்களாகவும்.., மிகத்தூய்மையான மனித அடையாள சின்னங்களாக இவர்கள் இருந்ததினலேயே இவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள்.. மனிதர்கள் தங்களின் இயல்பில் திரிந்து சென்று நஷ்டவாளிகளாக ஆளாக நேரிடும் நிலைகளில் அவர்களை வழி நடத்தி வெற்றி கண்டவர்கள்.. அவர்களின் அறியாமை மக்கள் அவர்களை சதி செய்து கொல்லவும், வெல்லவும் துணிந்த போதும் சளைக்காமல் நற்பணி ஆற்றி அவர்களின் ஆன்மாவும், உடலும், மனமும் அதாவது இம்மையும் மறுமையும் நலம் பெற பாடுபட்டார்கள்.

அந்த அளவிற்கு யுகம்..யுகமாய் அது போன்று பேசப்பட்ட பிறப்புகளாய் இல்லாதிருப்பினும் அந்தந்த கால கட்டத்தில் மக்களை இடறுகளில் நின்றும் காத்து மக்களை வழி நடத்தும் சிறப்பான பிறப்புக்களும் உண்டு.. அவைகள் தான் அந்த மக்களின் மனங்களில் நீங்காது இடம் பெற்றிருக்கும் நல்ல தலைவர்கள், அவர்கள் தங்களின் உயர்ந்த சிந்தனைகளாலும், சமூக சேவைகளாலும், சிறந்த வழிநடத்துதலாலும், தூய வாழ்க்கை முறைகளாலும் பேறு பெற்றவர்கள்.. ஆம் அவர்கள் தான் அண்ணல் காந்திஜீ, அன்னை தெரசா, மண்டேலா போன்றவர்கள்..

சில பிறப்புக்கள் அப்துல் கலாம், பராக் ஹுஸைன் ஒபாமா, போன்று மக்களால் விரும்பம்பட்டு புகழ் சூழ இருக்கும் அதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மையை கொண்டு சமூக அழுத்தங்களில் இருந்து தாங்கள் தங்களை வெளிகொண்டு வந்து மேலெழுந்து உயர் நிலை பெற்று வாழ்க்கையை வாழ முனைபவர்களுக்கு உதாரணமாய் இருப்பவர்கள் இவர்களின் பிறப்பும் பிரபஞ்ச அலங்கரிப்பே..

பாரதியார், காளிதாஸன், ரவிவர்மன், பிக்காஸோ, மைக்கேல் ஜாக்ஸன், புருஸ்லி, ஏ,ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ், அம்பானி, ஜுலியன் அசேந்ஞ் போன்ற துறை சார்ந்து ஒப்பிலாது உயர்ந்த பிறப்புக்களும் பிரபஞ்த்தின் கூறுகளே..
இவர்கள் போன்றோரை பெற்றவர்கள் பேறடைந்தனர்.. பிறந்த மண் பெருமை அடைந்தது.. அவர்களால் மக்கள் பயன் அடைந்தனர் அதனாலே அவர்கள் பிறப்பு போற்றப்பட்டது.. ஆனாலும் இதுவும் இயற்கையின் பிரபஞ்ச பெருஞ்சக்தியின் வல்லமையே.
அது எப்போதும் எதையும் நிகழ்த்தும்.. எந்த தருணத்தில் யாரை தெரிந்தெடுக்கிறது என தெரியாது நாம் நம் துறைகளில் துவழாது.. சலிப்படையாது சிந்தை தெளிவுடன் செயல்பட்டால் அதன் தெரிவு நாமகாவும் இருக்கலாம்.. நாமும் சுடர்விடலாம்.. நாம் சுடர்விடும் போது தான் நம் பிறப்பு சிறப்படைகிறது சுடர் விடுதல் என்றால் உலகத்திற்கே வெளிச்சமாய் சுடர்விடுதல் மட்டுமல்ல.. ஒரு நல்வாழ்க்கையை வாழ்ந்து தன் குடும்பத்தை நல்ல வழியில் வழிநடத்தி மற்றவருக்கு துன்பம் செய்யாது அவன் இறக்கும் தருவாயில் ஆஹா நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோமே என்று அக்கம் பக்கத்தினர் கூறும் வகையில் வாழ்தல் கூட சுடர் விடுதல் தான்.. ஒளியான பிறப்புத்தான்.
நம்மையும்.. நம்மிலிருந்து வரும் சந்ததிகளையும் மேன்மையான பிறப்புக்களாக ஆக்க அந்த யாவையும் மிகைத்த சக்தியிடம் சரண் அடைந்து யாசிக்கிறேன்..!
- ஜே.எம்.பாட்ஷா

2 கருத்துகள்:

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

இப்பதிவு குறித்து தங்களின் கருத்து....?

பெயரில்லா சொன்னது…

dear brother, it is relly a stuffy messeage keep it up.
--raja kamal rajakml@yahoo.com