13 அக்டோபர் 2013

வரும்... ஆனா வராது!

துபாய் குளிர்ந்துவிட்டது
***********************************
வாட்டி வதம் செய்த கோடையின் கொடூரம்! அது செப்டம்பர் முப்பதிலிருந்தே தணிய‌ இவ்வருட வெம்மையிலிருந்து துபாய் விடுதலையானது. அக்டோபரின் முதல் இரண்டு நாட்களின் காலை நேரங்கள் பனிமிகும் நாட்களை நினைவு படுத்தி புகைமூட்டம் போலே  இருக்கத்தொடங்கிய போதும் கூட பின் நாட்களின்  பகல் பொழுதுகளில் பகலவன் கொஞ்சம் படுத்தி எடுக்கத்தான் செய்தது. இருந்தாலும் இரவு குளிர் இதமளிக்க தவறுவதில்லை ஆதலால் அமீரகம் அலுவல் முடித்து குடும்பம் சகிதமாக வெளியே வரும் எல்லோருக்கும் ஏசியாகத்தான் இருக்கிறது.



திடீர்!
*******
நல்ல மனநிலையிலிருந்த வானத்திற்கு என்ன ஆனதோ தெளிவாக இருந்த அது திடீரென இன்று மாலை ஐந்து மணிவாகிலெல்லாம் மயங்கி சரிந்தது, இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் மத்திய நிலை... மெல்லிய பொடி மண் காற்று வான்நிலையில் அப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. வெப்பநிலை தப்பு சொல்லமுடியாதவாறு குளிராக இருந்தாலும் அலுவலகம் முடித்து மகிழ்வுந்தை செலுத்த சற்று சிரமமாகவே இருந்தது. இருந்தாலும் செலுத்தியே ஆகவேண்டும். அப்படியே நான் இருக்கும் அரேபியன் ரேஞ்சசிலேயே இருந்துவிட முடியாதே!



புறப்பாடு
***************
மகிழ்வுந்தின் திறவியை திருக.. செலுத்த தயாரானது.  நினைத்ததை விட சற்றே வெளிப்புறத்தில் பார்வை பதிக்கமுடியாததாகிப் போனது, இருந்தாலும் இதுதான் இன்றைய நிலை என எண்ணி மகிழ்வுந்து விரைந்தது. சன்னலை திறந்து ஓட்டிச் செல்கையில் மண் பொடியால் எழுந்த சிறு அரிப்பு கண்ணாடியை மூட வைத்தது.



வானத்தில் போகுதோ
******************************
சீதோதசநிலை சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது என்பதில் மனம் மகிழ்வடைந்திருந்தது. மகிழ்வுந்து துபாய் பைப்பாஸ் சாலையின் ஆறு வழிச்சாலையின் இரண்டாவது வழித்தடத்தில் விரைந்திருக்க.. அடைமழை ச்சோ...ஓ..ஒ... வென பெய்திருந்து அந்த மழையினூடே மகிழ்வுந்து சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறான சூழல் ஆனால் மழை மட்டும் தான் இல்லை.. மகிழ்வுந்து ஏதோ மிதப்பது போல் ஒரு உணர்வு.. எனது மகிழ்வுந்திற்கு முன்னும். இடதும், வலதும் செல்கிற வாகனங்களெல்லாம் ஏதோ எதிரே குறிப்பிட்ட அளவு தெரிகிற பாதைக்குமேல் உள்ள புகையில் சென்று  வானில் புகுந்து கொண்டே இருப்பது போல் தான் இருந்தது. அதில் எனது வாகனமும் விதிவிலக்கல்ல..! புகையினூடே புகுந்து வானில் மிதந்தது...  மிதந்து... கொண்டே வடிவேலு காமெடியான "வரும் ஆனா வராது" என்பது போலவே மகிழ்வுந்தை செலுத்தி..ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.


தேங்க் காட்! வித் குட் மூட்.

(இது போல் எத்தனையோ பதிக்கப்பட வேண்டிய அனுபவங்கள் அனுதினம் நடந்தாலும் இதை பதிக்க நாடியது மனம்)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

MSAH சொன்னது…

ஒருவேளை ஒடிசாவில் அடித்த பைலின் புயலின் தாக்கமாக இருக்குமோ...?

படங்களையும் போட்டு அசத்திவிட்டீர்களே.... அதுசரி.. மகிழுந்தை ஓட்டிக்கொண்டே எப்படி படம் எடுத்தீர்கள்?

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

பல படங்களை கஷ்டப்பட்டு எடுத்தேன் ஆனாலும் அதை பதிவிறக்கி பதிவிட முடியாது போனதாகையால் கூகுளின் உபயத்தில் தான் சிலதை எட்டுத்து தொகுத்தேன் என்பதே உண்மை.