அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
பிலாலியா ஆலிம்கள் வெகுஜன நாளேடான தினத்தந்தியில் கட்டூரைகள் எழுதத் தொடங்கியுள்ள செய்தி அறிந்து மிக்க மகிழ்வும், பெருமிதமும் அடைந்தேன். இது போன்ற தேர்ந்த அறிஞர்கள் எல்லாம் ஊடகத்தை இஸ்லாத்தை சிறப்பாக சொல்ல பயன்படுத்தவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது ஆதலால் இந்த செய்தி என்னை மிகவும் சந்தோசப்பட வைத்ததெனலாம். வாழ்த்துக்கள். வல்ல அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் அருள்வார்களாக!
மேலும் நான் எப்போதும் அன்பர் முதுவை ஹிதாயத் அவர்கள் மூலம் அமீகரத்தில் நடக்கும் வெள்ளிக்கிழமை குத்பாவின் தமிழாக்கத்தை வாராவாரம் பெற்று வருகிறேன். அதை விருப்பமுடன் படித்தும், பல விசயங்களை அறிந்தும் வருகிறேன். இம்மாதிரியான அறப்பணிகளை செய்யும் தங்களுக்கும் அதை அனுப்பித்தரும் அன்பர் ஹிதாயத் அவர்களுக்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகள்.
குறிப்பு: தந்தியில் எழுதிய கட்டுரையில் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறிப்பிட நபி(ஸல்) என்றே குறிப்பிட்டிருந்தீர்கள், ஆகவே வெறுமனே நபி (ஸல்) என எழுதாமல் சிறப்பாக தமிழகத்து சகோதர சமூக / மத- த்தவர்களும் "நபிகள் நாயகம் (ஸல்..) " என்றே அழைக்கும் பாங்கு இருப்பதால் அவ்விதமே "நபிகள் நாயகம் (ஸல்..) " என எழுதினால் நலமாக இருக்கும்.
அன்புடன்,
வழுத்தூர் . ஜா.முஹையத்தீன் பாட்ஷா
1 கருத்து:
யாரோ ஒரு சகோதரர் நபிகள் நாயகத்தின் பெயரோடு ஸல் என இடுகிறீர்களே ஏன் என கேட்டிட்ருந்தார். அவர் கேட்ட விதம் தான் சரியில்லை ஆனாலும் அதை சொல்ல வேண்டியது நமது கடமை.
(ஸல்) என்றே நபிகள் நாயகம் என்று எழுதி அடைப்புக்குறியில் இடுவார்கள். இது சுருக்கி எழுதுவதாகும். அதாவது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் என்பதையே (ஸல்) என்கிறார்கள் அதாவது இறைவனின் சோபனம், வாழ்த்து, நன்மாறயங்கள் நபிகள் நாயத்தின் மீது இலங்கட்டுமாக! என்பது தான். மரியாதை நிமித்தமாகவும், தங்களின் தலைவரை கவுரவப்படுத்தும் விதமாகவும், திருக்குர் ஆனில் இறைவனே சொல்லிய கட்டளையை செயல் படுத்தும் விதமாகவும் நபிகள் நாயகத்தை அவர்கள் பெயரை மட்டும் வெறுமனே சொல்லாமல் இதையும் சேர்த்து சொல்லுவது இஸ்லாமிய உலகின் மரபு. (ஸல்) என மட்டும் குறிப்பிடுவது ஏற்ற்புடையது அல்ல தான். முழுமையாக ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் என குறிப்பிடுவதே சிறப்பு.
கருத்துரையிடுக