16 செப்டம்பர் 2017

சிறு வெற்றி பெரிய மகிழ்ச்சி


சாரணர் இயக்க தேர்தல் ஒரு சிறு தேர்தல் தான் என்றாலும் அதில் எச்(..).ராஜாவின் தோல்வியை நரகாசுரனை வீழ்த்திய பெருமித களிப்போடு பெரும்பான்மையாக மக்கள் கொண்டாடுகிறார்கள், ஏனென்றால் அத்தனை மனக்காயம் பெரியாரை செறுப்பால் அடிப்பேன் என்று சொன்னது முதல் எல்லோரையும் ஆண்டி இன்டியண் என்று அடிக்கடி சொல்லுவது வரை அவரால் இந்த தமிழ் சமுதாயம் அடைந்திருக்கிறது.
ஆனால் தான் இச்சிறு தேர்தலில் ராஜா வீழ்த்தப்பட்டிருந்தாலும் எல்லோரும் அத்தனை பெரும் உற்சாக பெருவெள்ளத்தில் மிதக்கின்றனர் ஆனால் நச்சுப்பாம்பு போன்ற அவர்களது மூக்கு உடைபட்டிருக்கிறதே தவிர இதில் அவர்களின் விசப்பல் முறிக்கப்படவில்லை, இதில் அவரின் தலை தான் மொட்டை அடிக்கப்பட்டிருக்கிறதே தவிர மொத்தமாக அவரது சப்த நாடிகள் அடக்கப்படவில்லை ஆகையால் இனிமேல் தான் தமிழ்ச்சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம்.
மேலும் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட அந்த இடத்தில் மூதாட்டிகள் சிலர், பெரியவர்கள் சிலர் என அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி அவரோடு இணங்கி குலாவுகிறார்கள் என்பதிலிருந்து அந்த 286-ல் 52 என்ற எண்ணிக்கையில் கருப்பாடுகள் காவியாடுகள் உள்ளே கூடாரமிட்டுள்ளதையும், செல்லறித்துக்கொண்டிருப்பதையும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது இவை எல்லாவற்றையும் விட சம்பந்தமே இல்லாத இந்த ராஜாவை சாராணர் தேர்தல் வரை உள்ளே புகுத்தும் அடிமை அரசாங்கத்தின் சூழ்ச்சியும், கால்நக்கித்தனமும் அருவெறுப்பான ஒன்று.
எனவே இதே போல தமிழர்கள் விழித்தால் எந்தப்பரிவாரங்களையும் வீழ்த்தலாம். 2019-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இதே மாற்றத்தை தமிழர்கள் நாம் கொண்டுவந்து சாதிக்கலாம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

பா ஜக மற்றும் அதிமுக மிக அவலமாக நடந்து எல்லா வகையிலும் மக்களுக்கு அநீதி செய்கிறார்கள். இதன் பின்னால் இருப்பது பார்ப்பனீயம். அதிமுக அடிமைகள் பார்ப்பானிடம் வீழ்ந்து எட்டபனாக உள்ளனர். மக்கள் இவர்களின் அடக்கு முறைகள் மீறி போகும் போது எழுந்து அடக்குவார்கள்.