22 நவம்பர் 2022

பாலைவன பரமபதம் நூல் துபாயில் வெளியீடு

எங்கள் அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal குழும உறுப்பினரும் மெட்ராஸ் பேப்பர் வார இணைய இதழ் எழுத்தாளருமான Sivasankari Vasanth சிவசங்கரி வசந்த் அவர்களின் முதல் நூலான "பாலைவன பரமபதம்" வெளியீட்டு நிகழ்வு 19-11-2022 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.
நூலினை Galaxybs Galaxybs கேலக்ஸி பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டிருந்தது.
விழாவை குழுமத் தலைவர் ஆசிப் மீரான் Asif Meeran அண்ணன் தலைமையேற்று சிறப்பாக தொகுத்தளித்தார், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை நூலாசிரியர் மகள் பூர்ணிகா பாடினார். வரவேற்புரையை குழும உறுப்பினர் சந்தியா தண்டபாணி வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களான இந்தியத் தூதரக அதிகாரி மாண்பமை காளிமுத்து ஐயா அவர்கள் புதிய நூலை வெளியிட, குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பெனடிக்ட் ராஜ் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் திரு புகழேந்தி மற்றும் திருமதி உமா புகழேந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இணைந்தனர்.
நிகழ்வில் குழும உறுப்பினர்கள் Suresh Babu, Sasikumar Ssk , Balaji Baskaran Jazeela Banu Bilal Aliyar Subhan Peer Mohamed J Mohaideen Batcha Firdhous Basha மற்றும் சமீபத்தில் மராம்பு என்ற நூலை வெளியிட்ட எழுத்தாளர் Naseema Razak நசீமா ரசாக், வாழ்த்துரை வழங்கினர் பிறகு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினர் அதையடுத்து நூலாசிரியர் சிவசங்கரி ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியில் நூலாசிரியர் சிவசங்கரியின் கணவர் வசந்த் Vasantharaj Krishnaswamy அவர்களை ஆசிப் அண்ணன் அழைத்திட முதன் முதலாக மேடையேறி அவர் நன்றியுரை செய்தது முத்தாய்ப்பு. மேலும் நூலாசிரியர் சிவசங்கரியின் உறவினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டது சிறப்பு.

சுபஹான் அண்ணன் எப்போதும் போல சிறப்பான புகைப்படங்களை எடுத்தளித்தார். Ahamed Zayed அஹமத் ஜாயத், கலைஞன் நாஷ் கலைஞன் நாஷ் வீடியோ பதிவு செய்தனர்.
அபுதாபியிலிருந்து Raja Rajaram Balkarasu Sasi Kumar எழுத்தாளர் நித்யா குமார் எனப் பலர் திரளாக வந்திருந்தனர்.
விழா நிறைவில் அற்புதமான இரவு உணவு அளிக்கப்பட்டது.

அரங்க ஏற்பாடுகளை அண்ணன் FJ tours & Travels Riyas Ahamed செய்திருந்தார்.
நூல் கொரோனா" காலகட்டத்தைப் பற்றி பேசும் புதினம் அதில் குழுமத்தின் Kausar Baig மற்றும் Firdhous Basha இருவரின் அரும்பணியைப் பற்றி இந்த நூலில் பதிவு செய்தது பெரும் சிறப்பு.
மீண்டும் ஒரு நிறைவான நிகழ்வில் அன்பின் உள்ளங்களை சந்தித்ததில் உள்ளம் நிறைந்திருந்தது.

நிறைய நூற்கள் வரட்டும், சிவசங்கரி வசந்த். வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.

ஜா.மு
20-11-2022

கருத்துகள் இல்லை: