பப்ளிக் ட்ரான்போர்ட்
பேறு பெற்றவர்கள் பயணம்
தொடர்மழைக் கால குளிர்காலை,
அமீரகச் சாலை .
*
இருட்டறையில் இதமாக
குளிரை அனுபவித்து தூங்குவோர்
பெரும் பேறு பெற்றவர்கள்
*
இரண்டும் இல்லாமல்
அன்னந் தண்ணி இல்லாது
காரிலேயே காலையிலிருந்து
சிறைபிடிக்கப்பட்டு ட்ராபிக்கில்
சித்திரவதை அனுபவிப்போர் தான்
கொடுப்பினை யற்ற பிறவிகள்
***
ரவுண்டபவுட் பிரிட்ஜ் என எங்கும் வெள்ளம்
பல விபத்துக்கள்..
அவ்வளவு அவஸ்தையில் மக்கள்,
ஹெலிகாப்டர்கள் பரந்த வண்ணம்
தரையிலும் தண்ணீரிலும் வானிலுமாக
படுசிரம மக்கள் பணியில் போலிஸ்
ஷார்ஜா எப்போது மாறும்.
26-11-2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக