
சுல்தான் அஹமது நளீர்
தரையினில்
தவழும் நிலவோ – நீ
மடியினில்
மின்னும் கதிரோ
தமிழினில்
சேர்ந்த சுவையோ- நீ
கவியினில்
மிளிரும் அழகோ
இதயம் ஈர்க்கும்
விசையோ
இலக்கணம் பாடும்
அசையோ – நீ
இலக்கியம்
தேடும் ஓசையோ
நிதம்வரும்
நினைவினின் களிப்போ
விடியற்
காலையின் கிழக்கோ – நீ
விடியல்
நல்கிடும் இலக்கோ
மனங்கவர்
மணிவைரக் கல்லோ
தெய்வீக நாதக்
குழலோ – நீ
தெவிட்டாத
தெனின்பக் குறளோ
அன்பினில்
விளைந்த வித்தோ
ஆண்டவன் அளித்த
பரிசோ – நீ
ஆதவன் போல் வந்த
முரசோ
நகர்ந்திடும்
ஆனந்தக் குடமோ
நாயகன்
அளித்திட்ட அருளோ – நீ
நபிநாயகம்
உவந்திடும் நிறைவோ
சகம் போற்ற
சிறந்து வாழ்க!
புகழோங்க வாழ்வு
வாழ்க!! – நாங்கள்
பூரித்து
மனம்மகிழ வாழ்க!!!
4 கருத்துகள்:
"நதியிலாடும் நிலவோ” என்பது சரியாக இருக்கும்
புதுக் கவிதையில் புகுந்து விளையாடும் உங்கள் கற்பனைகள் என்னும் மலர்கள் மரபு என்னும் நாரில் தொடுத்தால் இன்னும் மணம் வீசும்
// தரையினில் தவழும் நிலவோ //
எனது இதயத்தின் அறைகளிலும் பாய்ந்து கொண்டு...
குழந்தையின் படமும், குழந்தைக்காண வரிகளும் அருமை..
// முகம்பார்த்து சிரிக்கும் பூவே – நீ
சகம் போற்ற சிறந்து வாழ்க!
புகழோங்க வாழ்வு வாழ்க!! – நாங்கள்
பூரித்து மனம்மகிழ வாழ்க!!!//
உங்களுடன் வாழ்த்துவதில் எனக்கும் மகிழ்ச்சி..
super, naan en makalukkake enru ninaiththukkonden............
super machan
கருத்துரையிடுக