14 ஆகஸ்ட் 2010

என்று அமைதியுறும்…



சொந்த தேசத்தின் மதிப்பை நாம் சிந்தித்ததில்லை,

தாய்மண்ணின் கண்ணியம் நமக்கு புரியவில்லை

சொந்த மண்ணில் வாழ்வது – அதுவும்

சுதந்திரமாய் வாழ்வது இவைகளெல்லாம்

நாம் மிக்க பேறுபெற்றவர்கள் என்பதை காட்டுகிறது.


நமக்கொல்லாம் நகம் வெட்டும் போது

சற்று சதைவெட்டி இரத்தம் வந்தால் கூட

சகித்துக் கொள்ள முடியவில்லை,

ஏனெனில் நாம் அத்தனை சுகவாசிகள்!


ஒரு நாடில்லாத அகதியிடமோ..

அந்நியன்தன் மண்ணை ஆக்கிரமிக்க

அஞ்சி..அஞ்சி..வாழ்வு வாழும்

அடிமை குடிமகனிடமோ – அல்லது

ஓர் பலஸ்தீனியிடமோ –

ஓர் ஈராக்கியிடமோ – இவைகளின்

அருமையெல்லாம் கேட்டுப்பாருங்கள்.


அவர்களின் அன்றாட நிகழ்வுகளைப் பார்க்கையில்

உள்ளம் தாங்க முடியவில்லை,

அந்நாட்டவர்களை கண்டு நிகழ்வினைக் கேட்டாலோ

கண்களில் ரத்தக்கண்ணீர் நம்மை அறியாமலே..

கேட்கும் போதே தாக்கம் இப்படி எனில் – அதை

நொடி நொடியாய் சுமக்கும் அவர்களை

நினைக்கக்கூட முடியவில்லை


ஒவ்வொரு நாளும்

பலஸ்தீனத்தின் சோகம்..

அணுகுண்டை விட அதிபயங்கரமாய்…!


கதரி அழுதிடும் குழந்தைகள்..,

கசிந்துருகி குமுறிடும் தாய்மார்கள்..,

இறைவனிடம் அபயம் கேட்டு அழுதிடும் முதியோர்கள்.. என

சோகமே அவர்களின் ஆயுளை நிறைத்து நிற்கிறது.

சோர்ந்த முகத்தில் வடிந்து கொண்டே இருக்கும்

கண்ணீர் தாரைகளின் ஓரங்களைக் கூட

சமநீதி.. மனசாட்சி கொண்டு துடைப்பதற்கோர்

தலைவன் பிறப்பெய்த வில்லை…


விஞ்ஞானப்புரட்சியும்.. பல்ஞானப்புரட்சியும்

அடைந்து விட்டதாய் மார்தட்டும்

மேற்கத்திய முதல் எட்டுத்திசை மனிதர்களில்,

சிறு இரக்கங்கூட காட்டாமல், இறுக்க மனமே பூண்டு

அதிகார புரட்சியின் மூலம் மனிதம் அழிக்கும்

துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைக் குண்டர்களை

அதட்டிக் கேட்க ஓர் ஆடைகட்டிய ஆண்மகன்

இதுவரை பிறக்க வில்லை…

ஊன்றி எழுந்து நீதியினைக உரக்க கேட்க

உலகத்திற்கு துப்பில்லை…


ஆட்சிக் கட்டிலிலும், ஆசைக்கட்டிலிலும்..,

இருக்கும் மோகத்தால்

பாபம்.. அரபக ராஜாக்கள்

மௌனிகளாய்.. பெட்…ளாய்…மா..மிழந்து..கேடாய்..!

ஆனாலும் கேட்கிறது மனம்

இந்த மண் எப்போது அமைதியுறும் என்று…?


ஆடிப்பாடி ஓடி விளையாடி குதூகலிக்க வேண்டிய

அப்பாவி குழந்தைகளின்

அழுகை ஓலங்களெல்லாம்…

ஆனந்த ரீங்காரமாய் மாறுவது என்னாள்..?


கண்ணியமாய் இருக்க வேண்டிய – பலஸ்தீனிய

கன்னிப்பெண்களும்.. குடும்பப் பெண்களும்

உணவுக்காகவோ… உடைக்காகவோ

பாழ்பட்டு பலர்கண்பட,

பலரால் உள்ளமும் உடலும் புண்பட

நாய்போல் நடுவீதிகளில்…

திரிந்திடும் காலமெல்லாம் மாறி

நல்லக்காலம் பிறப்பது எப்போது..?


இடிபாடுகளுக்கிடையில்

இவர்களது பிணங்கள் இல்லாமல்

இயற்கையாய் மரணம் என்பது எப்போது..?


குண்டுசப்தம்.. போர்விமான ஓசை..

அழுகை ஓலம்..பேரணிப் பேரொலி..

போராளிகளின் ஓட்டம்..

திடுக்கம்..

பயம்…

சோகம்…

இவைகளெல்லாம் இல்லாத

பலஸ்தீனம் என்று பிறக்கும்….?


இறைவா..!

உன் இதய நபிக்காகவாவது

கொஞ்சம் இரக்கம் செய்..!


விடிவை இறைஞ்சி…

ஜே.எம்.பாட்ஷா



3 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

////ஒரு நாடில்லாத அகதியிடமோ..

அண்ணியன் தன் மண்ணை ஆக்கிரமிக்க

அஞ்சி..அஞ்சி..வாழ்வு வாழும்

அடிமை குடிமகனிடமோ – அல்லது

ஓர் பலஸ்தீனியிடமோ –

ஓர் ஈராக்கியிடமோ – இவைகளின்

அருமையெல்லாம் கேட்டுப்பாருங்கள்.
/////////


இந்த வார்த்தைகள் உணர்வுகளையும் , வலிகளையும் ஒன்றாக கசிய செய்கிறது . மிகவும் அருமையான படைப்பு . வாழ்த்துக்கள் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி

பனித்துளி சங்கர் சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

நண்பர் சங்கர் அவர்களுக்கு, தங்களின் கருத்துரை எனக்கு உற்சாகம் தருகிறது, தங்களின் ஆலோசனைகளும், ஆதரவுகளும் எனக்கு அளியுங்கள். நன்றிகள் பல..