17 அக்டோபர் 2011

ஷைகு அப்துல் காதிரே



தொகைரா:

திருநாமம் கேட்டாலே திக்கெட்டும் அதிருமே
திருப்பாதம் தனைச்சுமக்க ஞானிகள் சிரம்சாயுமே
திருலோகம் ஆளுகின்ற பொருமானார் உயர்பேரரே
தருவீர் விஜயம் இங்கே ஷைகு அப்துல் காதிரே

பல்லவி:
உயிரைத் திரட்டிப் பாடுகின்றேன்
உதவும் கரங்கள் வந்திடாதோ
உங்கள் பாதக்கமலம் என்றும்
உண்மை துணைதான் தந்திடாதோ

யா காதிரே.. யா காதிரே.. அல்மதத் யா ஷைகு அப்துல் காதிரே..

சரணம்:
வாழ்வினில் வளமை செழித்திட வேண்டும்
நாளும் பொழுதும் அமைதி வேண்டும்
மனதில் தைரியம் நிறையவே வெண்டும்
குணமதில் அழகு கொஞ்சிட வேண்டும்

உயர்வான சிந்தனை உயர்வாக வேண்டும்
நிறைவான உள்ளம் நிறைவாக வேண்டும்
எக்கீன் என்பது என்றும்.. என்றும்..
ஹக்கில் மட்டுமே இருக்க வேண்டும்

எங்கள் தோள்களுக்கு வலிமை வேண்டும்
உங்களை துதித்திடும் புலமை வேண்டும்
எங்களை நினைத்தாலே என்றும் என்றும்
எதிரிகள் நடுங்கும் நிலைமை வேண்டும்

ஞான உலகம் சமைத்திட வேண்டும்
ஈனப் பேய்களை துடைத்திட வேண்டும்
அன்பும் அறமும் அறியணை யேற
பண்பின் அரசே பாதுகாப்பு வேண்டும்


எழுதியது 2005ம் ஆண்டு, சங்கை நபி இசைக்கோர்வையில் 2016ல் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை: