பல்லவி
:
புன்சிரிப்பு
பூமகனே கேளடா கண்ணே –உன்
பூர்வீகத்தை
மறந்திடாது நினைந்துகொள் கண்ணே
அனுபல்லவி:
பாபம்சேரா
பாலகனே தெரிந்துகொள் கண்ணே
இருந்தநிலை
மறப்பதுவே பாபமாம் கண்ணே
சரணங்கள்:
சிறந்தநாமம்
சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே - அந்த
நாமமதில்
உறைந்தயொன்று நீயல்ல கண்ணே
நாமரூப
பேதமில்லா உயர்பொருள் கண்ணே – நீ
நாமமதில்
அடங்கிடாத மறைபொருள் கண்ணே
அனுபவிக்கும்
யாவையுமே ஆய்ந்துபார் கண்ணே – அதில்
ஆன்மீக
விளக்கங்கள் கிடைத்திடும் கண்ணே
தெளஹீதின்
தெளிவில்நீ லயித்திடு கண்ணே – என்றும்
லெளஹீக
வாழ்விலும்நீ ஜெயித்திடு கண்ணே
பார்ப்பதிலே
பரமனையே பார்த்திடு கண்ணே – உன்
கேள்வியுணர்வு
இவையணைத்தும் வேறல்ல கண்ணே
அகமியத்தை
சுமந்தவர்கள் உயிரடா கண்ணே – உன்
உயிரைவிட
உணர்வைவிட மேலடா கண்ணே
கொடும்கள்ளக்
கூட்டங்களை வெறுத்திடு கண்ணே - அதை
கடும்சீற்றத்
துடனேநீ எதிர்த்திடு கண்ணே
இறையின்பகைகள்
விரைவிலேயே அழிந்திடும் கண்ணே -நம்
மறையின்நாதர்
மாண்புகளே ஜொலித்திடும் கண்ணே
இகமதிலே
பலர்அகம்மலர உழைத்திடு கண்ணே – இந்த
ஜெகமதிலே
வேறுமகிழ்வு ஏதடா கண்ணே
இதயத்தூதர்
இன்பநெறியில் நிலைத்திடு கண்ணே - அதில்
உதயமாகும்
உண்மையில்நீ உயர்ந்திடு கண்ணே
-ஜே.எம்.பாட்ஷா
என் மகன் சுல்தான் அஹமது நளீர்- ஐ மனதில் வைத்து வாழ்த்தாய் 2002-ல் எழுதியது, 2016ல் சங்கை நபி இசைக்கோர்வையில் வெளிவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக