ரபிய்யுல் அவ்வல் மாதமிது
ரஹ்மத் இறங்கும் நாட்களிது
ராஹத்தை கொடுக்கும் மணிகளிது
துயரத்தை துடைக்கும் துளிகளிது
மாதங்கள் அனைத்தின் சிரிப்பிது
வேதங்கள் அனைத்தின் திறப்பிது
மானுட இனத்தின் சிறப்பிது
மகிமைகள் அனைத்தின் பிறப்பிது
புவனத்தில் அடைந்திடும் சுவனமிது
திரண்டு அருள்தரும் தருணமிது
வசந்தம் பொழியும் கருணையிது-ஆதி
நிசப்தம் களைந்த கருவேயிது
பிரபஞ்ச அறிவின் வானமிது
மகிமைகள் யாவுக்கும் ஈற்றுயிது
மகுடங்கள் சுமந்த நாற்றுயிது
ஈமான் சுவாசிக்கும் காற்றுயிது
சாதகம் சகலத்திற்கும் ஆதமிது
சந்தோசம் நிலைத்திடும் அமுதமிது
அருளை அளித்த விளைச்சலிது
உண்மை அறிவித்த மேதையிது
உண்மை உணர்ந்தோர் போதையிது
சாயாமல் சந்தமிசை கலைகளிது
இயற்கை அணிந்திடும் நகைதானிது
இன்பத்தை பருகிடும் வகைதானிது
சாஹாபிகள் இதய சுகம்தானிது.
குறிப்பு: ரபிய்யுல் அவ்வல் என்பது ஹிஜ்ரி அரபி ஆண்டின் ஒரு மாதத்தின் பெயர். இதில் தான் நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் பிறை 12-ல் பிறப்பெய்தினார்கள். ரபிய்யுல் அவ்வல் என்ற அரபி பதத்திற்கு வசந்தத்தின் ஆரம்பம் என்பது பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக