13 மே 2012

முகநூல் நிலைத்தகவல்கள் 2010




முகநூலின் நிலைத் தகவல்களை சற்றே தொகுத்தால் நலமே இருக்குமே நாம் பல சூழல்களில் பலவித மனநிலைகளில் அவைகளை நாம் இட்டிருக்க அது நமது நிலையை கண்ணாடியாக காட்டும் ஒன்றாயிற்றே என்ற எண்ணத்தின் விளைவாக‌ அது தொலைந்தோ அல்லது புதைந்தோ போகாது இருக்கவும் நமது நினைவில் பழையதை கொண்டுணரவும் தான் இந்த தொகுப்பு.

கீழே உள்ளது 2010த்தில் இட்ட சில முக்கிய நிலைத்தகவல்கள்

பிப்.25 2010
"புரிய முடியாத புதிராய் உள்ளவனின் அரிய முகவரியை அறிய தந்தவரே! அன்பே! ஆருயிரே!! எங்கள் நாயகமே!!! உங்கள் புனிதப் பிறந்த நாளில் உலமெங்கும் இறையருள் சூழ அன்பும் மனிதாபிமானமும் அறிவும் நிறையட்டும்."

"Prophet Muhammed (PBUH) made very great intellectual and Humanitarian society & PEACE, LOVE & BROTHERHOOD also established by him. so i take this time to Salute him."

மே 28 2010
''மேன்மை தங்கிய மெளலானா மெளலவி அல் ஹாஃபிழ் F.M.இப்றாஹிம் ரப்பானி பாகவி காதிரி” அவர்கள் தாருல் பனாவை விட்டு நேற்று முன் தினம் மாலை (25-05-2010) திருச்சியில் அவரது இல்லத்தில் தாருல் பகாவை அடைத்தார்கள். அன்னாரது ஜனாஸா திருச்சியில் நேற்று (26—5-2010) நல்லடக்கம் செய்யப்பட்டது."

ஆகஸ்ட் 16 2010 காலித்திற்கு வாழ்த்து...
"வாழ்வில் உயர்ந்து.. சிறந்து.. நிறைய..நிறைய பற்பல பிறந்ததினங்களை வாழ்நாளில் பெறவும், ஏக இறையின் அருளும், ஏந்தல் நபி( ஸல்..) த்தின் அன்பும் சூழ என்னாளும் பொன்னாளாய் மகிழ்வெலாம் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன், காலமெல்லாம் காலித் வாழ்க! அன்புடபன்...ராஜாமுஹம்மத்"

செப்.21 2010
"உறுதியான மனம் படைத்தவனே உன்னதமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்கிறார்.- நார்மன் வின்சென்ட் பீல்"

செப்.26 2010
"சோர்ந்து விடாதீர்கள். வெற்றிக் காலத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன. நம்பிக்கையுடன் முன்னேறி செல்லுங்கள். வெற்றி நிச்சயம் .- ரூதர்போர்ட்"


அக்.28 2010
"பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும். - ஸ்ரீ ரமணர்"

டிசம் 17 2010
இதயம் துடிக்கும் போது
யாரும் கவனிக்கமாட்டார்கள் !"
"துடிப்பது நின்றபின்
எல்லோரும் துடிப்பார்கள் !!"
இதுதான் மனித வாழ்க்கையோ ?."

டிசம் 19 2010
"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்..
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை.. எந்திரன் பாடல் வரி"

டிசம்.30 2010
"In India we only read about death, sickness, terrorism, crime.
-Dr. APJ Abdul Kalam"

"முஸ்லீம் லீக்கின் சேவை இந்திய முஸ்லீம்களுக்குத் தேவை" கட்டூரைக்கு
நல்லுரை பகர்ந்த நல்லுள்ளங்கள் அனைத்திற்கும் என் நன்றிகள் பல, இது போல எழுத்தாலோ அல்லது எதன் மூலமாகவோ சமூக நற்காரியங்கள் ஆற்றிட இறைவனின் அருளையும், தங்கள் அனைவரின் துஆ வையும் வேண்டி நிற்கிறேன்"

டிசம்.31 2010
"எஜமானருக்கு ஜலதோஷம், வேலைக்காரர் அனைவரும் தும்முகிறார்கள். - போலந்துப் பழமொழி"

"புத்தாண்டு பொழிவுடன் வருகவே..
மனிதத்திற்கு சத்தான அனைத்தும் தருகவே..
அமைதியும் அன்பும் நெஞ்சில் நிலவ..
அருளுடன் பொருளும் வாழ்வில் பொருக..
உடல் நலம்மிக..உள்ளநலனும் மிகவே..
வாழ்நாள் அனைவருக்கும் கூடி..
வசந்தத்தால் மகிழ்ந்திடுவோம் பாடி..
2011....இனிதாகட்டும் நாம் அனைவருக்கும்" (இரவு மணி 11.46)



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: