16 மே 2012

காலி..! ஜாலி..!





கொடுப்பதுவும் பெறுவதுமே வாழ்வு
கொடுப்பவரும் பெறுபவரும்
ஒவ்வொரு சூழலில் ஒருவரொருவர்

நான் திட்டி கொட்டி தீர்த்தபோது
நீ தொட்டியாய் கொட்டியதெல்லாம்
பெற்றுக்கொண்டாய்!

நீ கொட்டியதென்ன அதிகம்..?
அதைக்கூடவா நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்!

இல்லையெனில்,
என்னதான் நம்மிடம் இருக்கிறது "புரிதல்"?

உள்ளம் திறந்து
இருப்பதை எல்லாம்
கொட்டிவிட்டால்.....

கொட்டக் கொட்ட
மகிழ்ச்சி நிறையும்!

கொட்டிவிடு எல்லாவற்றையும்...
நிறைய மகிழ்ச்சியால்
நிறையட்டும் உள்ளம்!

கனம் இருந்தால் தானே
மன ரணம் பெருகும்!

காலியாக்கி ஜாலியாவோம்!





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


பி.கு: இது எழுதியதற்கு எந்த நிகழ்வும் அடிப்படை இல்லை ஆனாலும் பொதுவான கருத்தின் அடிப்படையில் எழுத விளைந்த போது விழுந்த கவி!

கருத்துகள் இல்லை: