14 மே 2012

பேரியக்க வீரருடன் பேராசிரியர்





முனீருல் மில்லத் அவர்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூர் முஸ்ஸிம் லீக் முன்னால் தலைவர் அப்பா பாய் (எ)பதுவுத்தீன் அவர்களை நலம் விசாரித்த போது எடுத்த படம் அருகில் உடன் இருப்பவர் தஞ்சை மோட்டார் அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள்

இந்த "அப்பா பாய்"  மிகச்சிறப்பான முஸ்லிம் லீக் செயல்வீரர். காயிதே மில்லத் காலம் தொட்டு இன்றைய தலைவர் நமது பேராசிரியர் காதர் முகைதீன் காலம் வரை முஸ்லீம் லீக்கிற்காக உழைப்பவர், அவர் பள்ளிக்கூடம் அருகே சிறுவர்களுக்கான பாடபுத்தக மிட்டாய் கடை வைத்திருந்த போதும் எல்லோரிடமும் முஸ்லீம் லீக்கை குறித்து ஓயாது முழங்கி கொள்கை வளர்த்தவர்,  எண்ணிரந்த உறுப்பினர்கள் எங்கள் பிராந்தியத்தில் லீக்கர்களாக ஆவதற்கு இவர் ஓர் ஆதார புருஷர்.

வயது எழுபது எழுபத்தைந்தை தாண்டினாலும் முன்னால் வழுத்தூர் பிரைமரியின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்த மறக்கமுடியாத மறைந்த ஒப்பற்ற மனிதர் அல்ஹாஜ்.அப்துல் வஹாப் சாஹிப் அவர்களுடன் சேர்ந்து சிட்டாக பற‌ந்து..பறந்து.. தாய்சபையை இந்த பிராந்தியத்திலேயே வலுவாக இருக்க வழுத்தூரிலிருந்து கொண்டு பெரும் துணையாக‌ நின்றவர்கள். அத்தனை வயதிலும் இருவரும் அந்த டி.வி.எஸ் 50 யில் வட்டாரம் முழுவதும் இரவு பகல் என எந்நேரமானாலும் சமுதாய நிகழ்ச்சிகள், தாய்ச்சபை நிகழ்ச்சிகள் என கலந்து வந்து தஞ்சை மாவட்டத்திலேயே தாய்சபைக்கு மிகப்பெரும்பலமாக இருந்து வளர்த்தவர்கள் என்றால் மிகையாகாது.

முஸ்லிம் லீக்-க்கே அவர்களது நாடி நரம்பெல்லாம், உணர்வெல்லாம் என்றிருக்கும் அத்தகைய இந்த இணையில் ஒருவரான அப்துல் வஹாப் சாஹிப் மறைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் உடல் நலமின்றி இருந்து பிறகு இறையருளால் மீண்டு நலமே வீட்டில் இருக்கும் செயல் வீரர் அப்பாபாயை தலைவர் பேராசிரியர் வந்து பார்த்து ஆருதலும், சேமநலனும் விசாரிக்கிறார் என்றால் அதை அப்பா பாய் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக தனக்கு தாய்ச்சபை தந்த கண்ணியமாக நினைத்து நெஞ்சம் இனித்திருப்பார்.

வாழ்க தலைவர்!! வாழ்க தாய்ச்சபை!! வாழ்க இதை ஏற்பாடு செய்தவர்கள்!!!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



படங்கள் மக்கி பைசல்

1 கருத்து:

R.Mohamed Iqbal Kuwait சொன்னது…

Dear Batcha,
Thank you for your below commends i appreciate on you.

Warm Regards
R.Mohamed Iqbal
Kuwait
Mob:00965-97118394

"Helping Hands are better than Praying Lips"