20 மே 2012

இணைய 'தீ'ங்கு



எங்கே நிம்மதி
எனது அறைக்கு புதிதாக வந்தவர் ஒரு மாதமாக பணி முடித்து மாலை அறைக்கு வந்ததும் செய்தித்தாள் வாசிப்பார், சமைப்பார், சாப்பிடுவார் பின் இரவு 8.45 அல்லது 9 மணிக்கெல்லாம் மட்டையாகிவிடுவார். நாம் உறங்க போகும் 11.30 அல்லது 12 மணியெல்லாம் பார்த்தே அறியாதவர்.. இரண்டு நாட்களுக்கு முன் கேரிபோரில் போய் ஒரு ''வைஃபை-யும், ஜீ.பி.எஸ்-ம்'' இருக்கும் சாம்சங்க் கேலரி வாங்கி வந்தார். மெல்ல மெல்ல என்னிடம் இன்டர் நெட் எப்படி இயக்குவது அதன் கடவுச்செல் பதியுங்கள்.. இந்த மொபைல் இன்டர்நெட் எப்படி எடுக்குது என பார்க்கிறேன் என புது மாப்பிளையாய் உள்ளே புகுந்தவர் ................................................................ புகுந்தவர் தான் இரவு அவர் பார்க்காத மணிகளையெல்லாம் இன்று 10, 11 என பார்த்துக் கொண்டிருக்கிறார். தூக்கம் சற்று தூரம் போய் விட்டது. நேற்று வரை அமைதியாய் அழகான வாழ்வை நடத்தியவரை இன்று இன்டர்நெட் அவரின் கண்களையும் மனதையும் வாங்கிக் கொண்(ன்று)டு விட்டது.

இந்த இன்டர்நெட் யுகத்தில் நீங்க மட்டும் நிம்மதியா இருந்தா எப்படி.?

யாம் பெற்றம் இன்பம்..........! ஹா...ஹா...ஹா....!


குழந்தைகளுக்கு நஞ்சா..

இன்று மதியம் 12.45க்கு என்னை ஒரு விடயம் பெரிதாக பாதித்தது...அதன் அதிர்வு இன்னும் என்னில் இருந்து போகவில்லை...

மதிய உணவுக்காவும் ஓய்வுக்காகவும் எனது அலுவலகத்திலிருந்து கீழ் தளம் நேக்கி மாடிப்படியில் வருவது எனது வழக்கம். ஆனால் மற்றவர்கள் எங்கேயும் உள்ள வழக்கப்படி இங்கேயும் படிகளை அதிகமாக யாரும் பயன்படுத்துவது அரிதே! எல்லோரும் மின் தூக்கியில் தான் அதாங்க ''லிஃப்ட்'' போவாங்க வருவாங்க. அப்படி நான் மாடிப்படியில் இறங்கும் வேளையில் ஏழு வயதே நிரம்பிய மிகச்சிறுவன்.. குழந்தை மனம் மாறாதவன் இன்டர் நெட் எடுக்கும் மொபைலுடன் ஹெட் செட் பொருத்திக்கொண்டு அவனின் தளத்திலிருந்து யாரும் பார்க்காத வண்ணம் மூன்று தளங்கள் மேல் வந்து படியில் தான் யாரும் பயணம் செய்ய மாட்டார்களே என்ற அடிப்படையில் ஒதுங்கி... எதையோ தேடிக்கொண்டிருப்பதை பார்க்க எனது மனம் பகீர் என்றது... அவனும் நம் தென்னிந்திய பிள்ளை தான்.
விஞ்ஞானம்.. இங்கே எமனாவதை கண்டேன்.. விஞ்ஞானம் வீண் ஞானமோ ஏன் இவைகள் வந்தன என வெந்தேன்.. தனிமையில் சிறு பிள்ளைகளிடம் கணினி, மொபைல் எல்லாம் கொடுப்பதோ அல்லது அனுமதிப்பதோ எவ்வளவு கேடு என புரிந்தது.

நான் அந்த சிறுவனை கேள்வி கேட்க முடியாது...அவனும் இடத்தை காலி செய்து விட்டான். (கொஞ்சம் அவனுக்கு நல்லதை சொல்லலாம் என ஏதும் சொல்லப்போனால் அது எப்படி மாறுமோ அல்லது அவனது பெற்றொர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ.. ஊரைப்போல இங்கே வெளிநாட்டில் எல்லாரிடமும் நினைத்ததை சொல்லிவிட முடியாது,சற்று சிந்தித்து தான் செய்ய வேண்டும்) ஆனால் நாம் இருப்பதைந்திற்கும் மேற்பட்ட வயதில் கற்றுக்கொண்டதை பாலகனாய் இருக்கும் ..... எது என்னவென்றே தெரியாத அவனை வெம்பவும்... ஒரு வித மனவியாதிக்கு உட்படுத்தவும் இப்படி இந்த கேடு கெட்ட விஞ்ஞான உயர்வு இட்டுச்சென்று விட்டதே என்று தான் நான் மனச்சோர்வில் விழுந்தேன்

இதனால் சகலமானவர்களை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்..... இளைய சமூகத்தை அன்புடன் அரவணைத்து காப்போம்... தீமையில் மூழ்காமல் சற்றே அவர்களை அன்புடனான கண்காணிப்பில் இருத்தி சரியாக பாதையில் செலுத்துவோம்....ப்ப்ப்ப்ப்ளீஸ்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: