24 மே 2012

நெஞ்சில் நிறுத்தவேண்டியது

நான் இன்று மன மகிழ்வாக இருக்கிறேன்!


எந்த மன அழுத்தமும் என்னை அணுகாது விலகும்!


தொழில் ரீதியாக வரும் எல்லா பிரச்சனைகளையும் மனதில் உள்வாங்கிக் கொள்ளவும், வாழ்வின் கவலையாக எடுக்கவும் மாட்டேன்!


அவைகளை மேலோட்டமாகவே தொழில் சார்ந்து மட்டுமே கொண்டு கையாண்டு முடிப்பேன்!


வாழ்வின் அல்லது தொழில் ரீதியான எந்த ஒரு பிரதிபலிப்புகளால் நான் சோர்வடையக்கூடியவன் அல்ல! 


ஏனெனில் இது வெல்லாம் இயற்கையே! 


இவைகளெல்லாம் பொருளீட்ட நாம் பங்கேற்பவையே அல்லாது உடல் நலத்தையோ அல்லது மன நலத்தையோ கெடுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு பெரியவைகள் அல்ல!


ஏனெனில் மனதை சந்தோசமாக வைக்க்கவும், உடலை பாதுகாக்கவுமே நாம் உழைக்கிறோம்.. உழைப்பால் மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்ள மாட்டேன்!


எனக்கு இறைவனின் அருளும்.. பிரபஞ்ச பேரருள் நபிகள் நாயகத்தின் ஆசியும் சூழ்ந்து உள்ளதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்!


என்னை சூழ்ந்த எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்!


என்னால் முடிந்த அளவு அவர்களை நல்ல விதமாக வைத்துக் கொள்ள நான் முயல்வேன்!


இறை அதற்கு துணை புரியும். ஆமீன்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



(2010-ல் அபுதாபியில் பணிபுரிந்த போது ஏற்படும் பல பணி நிமித்தமான சூழல்களில் எனக்கு நானே சொல்லிக்கொண்டது.)

கருத்துகள் இல்லை: