மக்கள் நலம் மட்டுமே நாடும்
மக்கள் விரும்பிய அரசியல் ஞானியை
இந்திய துணைகண்டம் சுமந்திருந்தது,
சுமந்திருந்த காரணத்தால்
சுமை தெரியாமல்
சுகமாய் இருந்திருந்தது – அவர்
சுவனம் சென்ற சனத்திலிருந்தே
தேடித்தேடித்தான் அழுத்திருந்தது
அழகிய புண்ணியத்தையும்,
உலவிய கண்ணியத்தையும்..!
ஆம்,
புவனம் தேடிடும் அப்புனிதர் தானே
கண்ணை இமைப்போல்
கவ்மை காத்த எங்கள்
கண்ணியத்தென்றல் காயிதேமில்லத்!
தலைவரென்றால் இப்படித்தான் என
தகைசால் தலைவராய்
தலையாய தலைமையின்
தன்னிகரற்ற இலக்கணமாய்
தங்கமென வாழ்ந்து சென்ற சிங்கம் தானே -நம்
தரணி கொண்டாடும் காயிதேமில்லத்!
தகைசால் தலைவராய்
தலையாய தலைமையின்
தன்னிகரற்ற இலக்கணமாய்
தங்கமென வாழ்ந்து சென்ற சிங்கம் தானே -நம்
தரணி கொண்டாடும் காயிதேமில்லத்!
அங்கியென ஜிப்பாசூழ்
சங்கைமிகு சமுதாய துடிப்பு!
அழகு தாடியில் அமைந்திருந்த
பழகுதமிழ் வனப்பு!
துருக்கி தொப்பி அணிந்திருந்த
சன்மார்க்க சிறப்பு!
தூரத்திலும் யாரும் தூற்றமுடியா
தூய்மைவாழ்வின் சொலிப்பு!
மறைந்தும் புகழ் மகுடம் சூடி வாழும்
மாமேதை மனம்நிறை காயிதேமில்லத்!
சங்கைமிகு சமுதாய துடிப்பு!
அழகு தாடியில் அமைந்திருந்த
பழகுதமிழ் வனப்பு!
துருக்கி தொப்பி அணிந்திருந்த
சன்மார்க்க சிறப்பு!
தூரத்திலும் யாரும் தூற்றமுடியா
தூய்மைவாழ்வின் சொலிப்பு!
மறைந்தும் புகழ் மகுடம் சூடி வாழும்
மாமேதை மனம்நிறை காயிதேமில்லத்!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன்
பாட்ஷா
2 கருத்துகள்:
காலங்கள் மாறும்
எனினும்
காலங்கள் தோறும்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின்
வழிகாட்டுதல்கள்,
வாழ்ந்த விதம்
புதுப்பிக்கப்படும்
பூக்களாய் விளங்கும்...!
அந்தப் பூக்களுடன் சேர்ந்த
நாராவோம்
நாமும் மணம் பெறுவோம்!!
கருத்துரையிடுக