14 நவம்பர் 2013

சிறப்பான தலைவர் நேரு!



வாசித்தல் எனக்கு ஆசிய ஜோதி ஜவஹ்ர்லால் நேரு மீது மதிப்பையும், மரியாதையையும் தந்திருக்கிறது. அவர் அகில இந்திய தலைவர் என்பதையும் மீறி சர்வ தேச அளவிலும் மதிக்கத்தக்க சிறப்பான ஆளுமையாக இருந்தார். அவருக்கு பின் இந்திராவை சொல்லலாம். இவர்களுக்கு பிறது இந்தியாவிலிருந்து சர்வதேச ஆளுமையாக மதிக்கத்தக்க ஒருவரை சுட்டிக் காட்டுவது வெற்றிடமாகவே இருக்கிறது.

நேரு மிகச்சிறந்த தலைவர், பன்முகம் கொண்ட இந்திய சமூகத்தில் பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை வழி நடத்தியவர்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், படேல் போன்ற பாசிச சக்திகளை லாவகமாக கையாண்டு இந்திய துணைகண்டத்தின் பாரம்பரிய பெருமைக்கு விபரீதம் நேராமல் காத்தவர். இப்படியாக நேருவின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், ஃப்ரீடம் அட் மிட் நைட்"  என்ற இரண்டு உலகப்புகழ்பெற்ற புத்தகங்களை படிக்க பெரும் ஆவல்.

குழந்தைகளின் மீது பேராவல் கொண்ட நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக இந்தியா முழுவது கொண்டாடி களிக்கிறது.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இனிப்பு வழங்குவார்கள். குழந்தைகள் மகிழ்வார்கள்.

அனைவருக்கும் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் (குழந்தைகள் தின) வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: