இன்றைக்கு வந்த செய்திகள்
நீ அப்பல்லோ ஆஸ்பத்திரியில்
இதயம் சார்ந்து சேர்க்கை என்றது.
ஒன்றும் ஆபத்தில்லை
சிறிய அட்டாக் தான்
"ஆஞ்சியோ" செய்ய ஆயத்தம்
எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள்.
தமிழ்த் திருநாட்டில் பலருக்கு
இலவசமாய் இசை மருத்துவம்
பார்த்தது நீ!
மயக்கம்,
தலைவலி
மண்டைக்குடைச்சல்
தலைச்சுற்றல்
அதீத டென்சன்
நெஞ்சுவலி
தூக்கமின்மை
மன அமைதியின்மை - ஏன்
பலருக்கு பைத்தியம் என்று கூட
சேர்த்துக் கொள்ளலாம்
இவைகளெல்லாம் அனுகாமல்
இசை மருந்திட்டது நீ!
ராக தேவனே! இசைப் பிறவிகள்...
அதிகம் மெய்மறந்திருப்பார்கள்,
யோகம் கற்காமலே அது அவர்களை ஆக்கிரமிக்கும்,
ஆன்மீகம் இருப்பதால் மனம் அமைதியாகும்.
கவலை விடு,
உன்னால் உலகம் கவலை மறந்தது
உனக்கொன்றும் நேராது.
பல கோடி பேருக்கு
பாட்டால் ஆயுள் நீட்டித்திருக்கிறாய்.
அவ்வளவு எளிதில்
உன்னை இசை விடாது.
இசைக்காக வாழ்வாய்!
பல கோடி மக்களின்
பிரார்த்தனை உன் இதயம் சீராக்கும்.
.-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
இசைக்காக வாழ்வாய்!
பல கோடி மக்களின்
பிரார்த்தனை உன் இதயம் சீராக்கும்.//
அனைவரின் சார்பாகவும்
அற்புதமான கவி முலம் பிரார்த்திக்கும்
தங்கள் பிரார்த்தனையில்
எங்களையும் இணைத்துக் கொள்கிறோம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
//பல கோடி மக்களின்
பிரார்த்தனை உன் இதயம் சீராக்கும்.//
அந்த பலகோடி மக்களின் நானும் ஒருவன். இசைஞானி நலம் பெற நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்.
கருத்துரையிடுக