30 டிசம்பர் 2013

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு என்ற செய்தி நெஞ்சுக்கு மிகவும் வலி கொடுத்திருக்கிறது, அவர் எழுபத்தி ஐந்து அகவை ஆனவர் என்ற போதிலும் இன்னும் நிறைவாக அவர் நம்மோடு இருந்திருக்க கூடாதா என்றே மனம் ஏங்குகிறது.


ஏனெனில் இயற்கையை சுரண்டி காசாக்கும் மனிதர்கள் இன்றைய இயற்கை வளங்களையோ அதன் சுரண்டல் காரணமாக நாளைய சமுதாயம் எதிர்நோக்கும் பயங்கரத்தையோ நினைத்து பார்ப்பதில்லை. அந்த விசயத்தில் ஓய்வில்லாமல் தனது வானகம் எனற அமைப்பின் மூலம் அயறாது போராடி இயற்க்கைக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்தவர். அவரது வானகத்தின் மூலம் மீண்டும் ஒரு இயற்க்கை மறுமலர்ச்சிக்கும், இருக்கும் வளத்தையாவது காப்பதற்கும், அழிந்து வரும் விவசாயத்தை வளர்தெடுப்பதற்கும் இவர் மேற்கொண்ட பணி யாராலும் அளவிடமுடியாதது.

செயற்கை உர மருந்து உபயோகம், மண் மலடு, தண்ணீர் வளம், இயற்கை வேளாண்மையின் மகத்துவம், இயற்கை வாழ்வியல் என அவர் செய்த பிரச்சாரத்தின் பலன் ஆயிரக்கணக்கான மனங்களை இயற்கையை நோக்கி திருப்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. அவ்வாறான சாதனைக்கு சொந்தக்காரர் இன்று இயற்கை எய்திருக்கலாம் ஆனால் அவர் விதைத இயற்கை விதை நமது நெஞ்சில் தூவப்பட்டு இருக்கிறது. ஆழமாக சிந்தித்து அதை ஆலமரமாக வளர்ப்போம் வரும் சந்ததிகளை அவர் கண்ட கனவு மெய்ப்பட காப்போம்.

நம்மாழ்வார் நம்மோடு இருப்பார் நாம் அவரின் பணி தொடரும் காலமெல்லாம். வாழ்க நம்மாழ்வார்.. எங்கும் வளர்ந்து மிளிர்க அவரது தொண்டு. அன்னாரின் ஆத்மா சந்தி அடைவதாக.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

ரெங்கன் சொன்னது…

இயற்கை விவசாயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு இயற்கை விரும்பி மண்ணின் மைந்தர் மண்ணில் சாய்ந்தது. இந்நாளில் ஒரு விவசாயியாது இயற்கை விவசாயம் செய்ய உறுதிமொழி எடுப்பின் அதுவே நாம் அவருக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலி. நம்மாழ்வாரின் ஆத்மா சாந்தி அடைய செய்வது நம் கையில் தான் உள்ளது.