11 டிசம்பர் 2012

கூரியர் வந்தது

இன்று மாலை ஒரு கூரியர் வந்தது, 

கொண்டுவந்தவர் காலையிலிருந்து அலைந்து திரிந்து விட்டு
"இது உங்களுக்காகத்தான் இருக்கும் என்றெண்ணி கொண்டுவந்தேன் இது உங்களுடையதா"

எனக் கேட்க "ஆமாம்" என்ற என் தந்தையை நோக்கி அவர் "ஆமாம் எப்போது நீங்கள் அரண்மனை மேட்டுத்தெருவில் குடி இருந்தீர்கள்" என கேள்வி எழுப்ப என் தந்தைக்கு சிரிப்பு வந்ததாம்.

"இன்று மெயின் ரோடாகியிருக்கும் இந்த தெரு தான் அரண்மனை மேட்டுத்தெரு" என விளக்கம்
 கொடுத்திருக்கிறார்.

விசயம் என்னவென்றால் வாக்காளர் அட்டையில் அரண்மனை மேட்டுத்தெருவென்கின்றனர்... மற்றதில் மெயின் ரோடு என்கின்றனர் சிலதில் இரண்டையும் கூட இடுகின்றனர் ஆனாலும் வழக்கொழிந்த பெயர்களை ஆளுவதில் அரசாங்கம் முன்நிற்பதால் இப்படியான குழறுபடிகள் நிகழ்கிறது...

நல்லவேலை கூரியர் வந்து சேர்ந்தது.. யார் இப்படி அந்த வழக்கொழிந்த பெயரை தேடிப்பிடித்து முகவரியில் எழுதியது என்றால் எல்லாம் நம்ம பேங்க் வாலாக்கள் தான்.. அவர்களின் ப்ரூஃபில் இருக்கும் முகவரியை பார்த்து எழுதிருக்கிறார்கள். இது ஒரு சிறு சம்பவம் தான் ஆனால் நமது நடைமுறையில் இது போன்ற குலறுபடிகளுக்கு பஞ்சமில்லை! வாழ்க நமது தெருக்களின் புது - பழையப் பெயர்கள்




-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: