19 ஜனவரி 2012


காதல் திருமணம் என்ற பெயரில் அதிகரித்து வரும் சமூகம் விட்டு சமூகம் தேடி.. ஓடிப்போகும் அல்லது மிரட்டலுக்கு பணியவைக்கும் சம்பவங்கள்... இது ஏதோ இருவரின் தனிப்பட்ட விவகாரமாக இருப்பதாக தெரிந்தாலும் சமூகத்தில் பின்விளைவை ஏற்படுத்தும் கவணிக்கப்பட வேண்டிய மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய விசயம் இது ஏதோ ஒரு காழ்புணர்வு என யாரும் நினைத்திட வேண்டாம் ஆழசிந்தித்தால் இதை வரவேற்பது முற்போக்கு அல்ல என புரியும் மேலும் இவ்வாறான திருமண வாழ்வுக்கு ஒரே சமூகத்தில் நிகழும் திருமணத்தை ஒப்பிடும் போது உள்ள பாதுகாப்பு, நலைப்பாடு, அல்லது அதன் குழந்தைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சனை என சொல்லிக்கொண்டே போகலாம். 

தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால் சமூக ஒழுங்கில்லாமல் இவ்வாறு ஒழுக்கவியல் சிதைவில் இன்றைய நிலை முன்னேறிக்கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. மேலும் கோ-எஜுகேகசன் மற்றும் அலுவல் என்று இன்று செல்வதின் பின்விளைவுகள் தான் இவைகள். முக்கியமாக இது வெறும் காமம் சார்ந்த தேடலுக்கான விடைதானே தவிர மார்க்கம் சொல்லித் தந்திருக்கும் பண்புநலன்களை அதன் நன்மைகளை அவர்களுக்கு சரியான முறையில் எடுத்துரைக்காத வளர்பாளர்களின் தவறால் வந்த குறைதானே தவிர வேரல்ல! தாய் தந்தைகள் தங்களின் பெண்டு பிள்ளைகளுக்கு மற்றவர்களோடு எவ்வாறு பழகவேண்டும், ஆண்மகனோடு தொடர்பு கொள்ளவோ, சந்திக்க நேர்ந்தாலோ அல்லது எதிர்பட்டாலோ எவ்வாறு நடக்கவேண்டும், இஸ்லாம் அது குறித்து என்ன சொல்கிறது, நபிகள் நாயகம் (ஸல்..)  நமக்கு எவ்வாறு இருக்க  சொல்லி இருக்கிறார்கள், நம் நபிகளார் (ஸல்) அவர்களின் தூய திருக்குடும்பத்தார்கள், பாத்திமா நாயகியார் இவர்களெல்லாம் எவ்வாறு வாழ்ந்து சென்றார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காததன் விளைவைத் தவிர அதற்கு இந்த சமூகம் கொடுக்கும் விலையே தவிர வேறில்லை!

நேற்றும் கூட ஒரு தொலைக்காட்சியில் மர்ஜானா என்ற பெண்ணும் திருமாளன் என்பவரும் தங்களின் காதல் திருமணம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு ராஜகிரியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதும் நாம் அறிந்திருக்க்லாம்! 

வேதனை என்னவென்றால் காதலுக்குரிய இலக்கணம் இன்று தவறாக விளக்கப்படுகிறது, சமூகத்தை திரையுலகம் வழிநடத்துகிறது... நல்ல தத்துவங்களும், தலைவர்களும், சிந்தனையாளர்களும் புறந்தள்ளப்படுகின்றனர்!! எதார்த்தங்கள் மறைக்கப்படுகின்றன!!! சதிவலைக்களும் பின்னாலிருந்து அதை ஊக்கப்படுத்தியவர்களும் சிரிக்கின்றனர்!!!

நிலைமாறட்டும்... சமுதாயம் மீளட்டும்...!

-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: