29 ஜனவரி 2012

நமது முற்றத்திற்கு எனது முத்தம்



முற்றம் பெற்றேன்.. – உடன்
முத்தம் தந்தேன்

எழுத்துக்கள் வாசித்தேன்
இதயத்தை தொட்டது

கருத்துக்கள் ஒவ்வொன்றும்
கல்பினை குளிர்வித்தது

மொத்தத்தில் முற்றம்
ஆசிரியரின் முகம் பார்க்காமலேயே
அவர் முகவரி கூறியது



அபூ ஹாஸிமா –
இவர் பெயரோடு
ஹாஸிம் இருப்பதாலோ என்னவோ
ஹாஸிம் குடும்ப மாசில்லாநேசரானார்

அறிவை அடகுவைத்து விட்டு
சிந்தனைக்கு சிரச்சேதம் செய்துவிட்டு
உண்மையைச் சொல்ல
அல்லாஹுவைத் தவிர
அனைவருக்கும் அஞ்சிவிட்டு
உளத்தால் மாக்களானதால் - சில
உலமாக்கள் எனப் பெயர்கொண்ட
இருண்ட உள்ளத்தாரின் இருட்டடிப்பால்
சமூகத்திற்கு சன்மார்க்கம்
காலம் காலமாகவே மறைக்கப்பட்டு வந்தது
இந்த ஏக்கம் ஏகபோகமாக
எங்கள் இதயங்களில்..!

இதில்,
மார்க்கப்பத்திரிக்கைகளின் கூத்தோ
தாங்க முடியாதது..,
கேள்வி பதில் பகுதியில்
மார்க்கம் கருவாட்டுச் சந்தையாய்
உருமாறும் காலத்தில்..
அத்தர் வாடை வீச
நெற்றிக்கண் திறந்து
நீதம் பேசுகிறது முற்றம்.


நாட்டைக் கெடுத்து நிற்கும்
காட்டு எலிகளுக்கு
சாட்டை தயாராகிவிட்டது
முற்றமே உன்னால் 
எம் மனம் திடம்..திடம்..
இனி நீ புரி..நடம்.. நடம்..


இன்று
எங்களது முற்றம் வந்த
நமது முற்றமே வருக!
அபூ ஹாஸிமாவே வாழ்க.!!
எல்லார் நெஞ்சையும் ஆள்க!!!


2006 என நினைக்கிறேன்.. அப்போது நமது முற்றம் ஆசிரியர் துபை வந்தபோது ஒரு நிகழ்வில் நான் வரவேற்க நான் அவர் முன் மொழிந்த கவிதை..


குறிப்பு;  ஹாஸிம் குடும்பம் - நபிகளாரின் குடும்பம்..


-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: