17 ஏப்ரல் 2016

தெறி - விமர்சனம்



பொதுவாகவே தெறிக்கு மிக்ஸிங் கமெண்ட்ஸ் தான் வந்து கொண்டிருக்கிறது, பெரும்பாலும் வரவேற்பு.. ஆனாலும் எப்போதும் போல விஜய் படத்தை கழுவி ஊற்றவேண்டும் என சிலர் கமெண்ட் போடவும் தவறுவதில்லை. என்டெயிண்மெண்ட்க்குன்னு போனால் பாத்துட்டு ஜாலியா வரலாம்.
படத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஏழை குழந்தைகளை வதைத்து பிச்சையெடுக்க வைத்தல், கட்டிட காண்டிராக்டர்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதும் போதிய ஊதியம் கொடுக்காதும் ஏழை வேலையாட்களின் உயிரில் எப்படி விளையாடுகிறார்கள் என்பது, அதிகாரத்தில் இருப்பவர்கள் நிகழ்த்தும் கடத்தல் கற்பழிப்பு நிகழ்வுகள் என சில பல மெஸேஜ்களையும் மசாலாவுடன் கலந்து கொடுத்திருக்கிறார் அட்லி. விஜய்யின் வழக்கமான பன்ச் டயலாக், அது இதுவென எந்த எக்ஸ்ட்ரா ஐய்ட்டங்கள் எதுவும் இல்லை. படத்திற்கு தேவையானதை மட்டும் செய்யச்சொல்லி வேலை வாங்கி இருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக மீனா மகள் நைனிகா நன்றாக நடித்திருக்கிறார். சமந்தாவுக்கே படத்தில் வைட், எமிஜாக்சன் கருவேப்பிலை. மொட்டை ராஜேந்தர் படமுழுக்க கதையோடு ஒன்றிவருகிறார்.வில்லனாக வரும் டைரக்டர் மகேந்திரன் எதார்த்தமாக நடித்திருக்கிறார். ராதிகா அம்மா வேடத்தில்.
அட்லி கமெர்ஷியல் முன்னணிடைரக்டராக நிச்சயம் வலம்வருவார். படம் தொய்வின்றி ஓடுவது இயக்குனரின் வெற்றி. பாடல் காட்சிகளில் ஷங்கரை நியாபப்படுத்துகிறார். ஜிவியின் இசை படத்திற்கு பொருத்தம், பாடல் காட்சிகளில் யாரும் பாப்கார்ன், டாய்லெட் என எழுந்து போகவில்லை. படல்களில் தேவா பாடிய ஜித்து ஜில்லாடி மனதில் நிற்கிறது. மற்ற ஒரு பாடலை விஜய் பாடியதாக யாபகம்.
பார்த்தவகையில் தெறி நல்ல பொழுதுபோக்குப்படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம். பிள்ளைகளுக்கு பிடிக்கும், எங்கள் ஷோவிலும் நிறைய பிள்ளைகள். அம்மா சென்டிமெண்ட், அப்பா மகள் பாசம், கொஞ்சம் காதல்,கொஞ்சம் ரொமன்ஸ், அதிரடிசண்டைகாட்சிகள், யூசுவல் விஜய் காமெடி, டாண்ஸ் என எல்லாம் கலந்த கமெர்ஷியல் மசாலா படமாய் விஜய்க்கு புலி கொடுத்த தொய்வை தெறி சரிகட்டி இருக்கிறது,
அமீரகத்தில் மலையாளிகளின் மகத்தான ஆதரவோடு ஹவுஸ்புல். மேற்படி விமர்சனத்தால் என்னை யாரும் விஜய் ரசிகனென விபரீத முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

வேகநரி சொன்னது…

//என்னை யாரும் விஜய் ரசிகனென விபரீத முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.//
:)
சுவாரஸ்சமான பதிவு. தெறி நான் பார்க்கல.
//எமிஜாக்சன் கருவேப்பிள்ளை.//
என்னங்க?!எமிஜாக்சன் தான் தமிழகத்தில் உள்ளவங்க டாப் ஸ்டார் என்று நண்பன் சொன்னார்!

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

எமி ஜாக்சனுக்கு இந்தப்படத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்பதை தான் சொன்னேன்