17 மே 2016

மதிப்பெண்

ஆண் பெண்ணுக்கு பின்னால் போவது ஆணுக்கு பின்னால் பெண்போவது எல்லாம் இயற்கையின் விதி.. ஆனால் ஆண் பெண் இணைந்த ஒட்டு மொத்த சமுதாயமும் மதிப்பெண்ணுக்கு பின்னால் பொவது தான் செயற்கையாய் செய்யப்பட்ட சமுதாயச்சதி.
மதிபெண் வாங்கியவன் ஒருவேளை அப்படியே கடமாக்கி எப்படியோ மதிப்பெண் பெற்றவனாயிருக்கலாம், மதியூகமாய் சிந்திப்பவன், பரிட்சையை எல்லாம் பொருட்டாகவே எண்ணாது இவைகளைத் தாண்டி அவனது எண்ண அலைகள் எங்கோ.. எதையோ சாதிக்கும் முனைப்பில் இருக்கலாம்... ஆகவே மதிப்பெண்னால் ஒரு மாணவனை, அவனது திறமையை மதிப்பது எல்லாம் ஒரு மூடச்செயல் தான், அதைவிட மதிப்பெண் பெருமை பேசுவது படித்த அறியாமை எனத்தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் அதிக மதிப்பெண் பெறுவது என்பதும் ஒருவித திறமை அதற்காக வேண்டுமானால் பெற்றவர்களை வாழ்த்தலாம். பெறாதவர்களை துச்சமெனப்பார்ப்பது எவ்விதத்திலும் சரியான செயல் அல்ல என்பதே என் எண்ணம்.
அதிக மதிப்பெண் வாங்காத மேதை மாணவர்களை நான் "மதி" ஆணாய், "மதி" பெண்ணாய் தான் பார்க்கிறேன். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெற்றியை பள்ளிக்கூடத்திற்கு வெளியேயான வெளி தான் நிர்ணயிக்கும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

+2 தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியானது.
முகநூலில்....

கருத்துகள் இல்லை: