17 மே 2016

சட்டசபை தேர்தல் 2016 முகநூல் பதிவுகள்

பூமித்தாய் பூரிக்கிறாள்..
J Mohaideen Batcha feeling relaxed.
13 hrsAl Ajman
அம்மா... அம்மாவென அம்மாவிற்கே உரிய மாண்பை கெடுத்து பொய்த்தாய் வேடமிட்டவர்கள் அதிகாரமிழக்கப் போவதை உணர்ந்து.. இனி அறம் சிறக்க இருப்பதை எண்ணி மனங்குளிர்ந்து ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறாள் நிலமடந்தை.
ஆனந்த மழையால் தமிழ்த்தரணி குளிர்கிறது.

19 hrsAl Ajman
ஜெ. பேட்டியை பார்த்தால் அவருக்கே நம்பிக்கை இல்லாதது போல் தான் பேசுகிறார்.. மக்கள் போன முறை செத்த பாம்பை உயிரூட்டியது போல ஏதும் செய்யாமல் இருக்கவேண்டும்.
அவர் பேச்சிலேயே அந்த கண்டெய்னர்களுக்கான விளக்கம் அப்பட்டமாக தெரிகிறது, அந்த அளவில் தான் அவரது மனநிலை.
இனி மக்களே மகேசர்கள்.

தப்பவிடப்பட்ட 5 கண்டெய்னர்களும், மாட்டிக்கொண்ட 3 கண்டெய்னரின் 570 கோடியும் காலத்தின் கேவலம், தமிழகத்திலும், இந்திய அளவிலும் அரசியல்வாதிகள் மக்களை எவ்வளவு அகோரத்தனமாக சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்று. முடிவு ஒருவேளை அப்படி இருந்தால் என பணத்தை பாதுகாக்கும் இந்த கேடித்தன ஆட்சியர்களின் பேய்த்தனம் அழியப்போவது எந்நாள்..?

பெய்யும் மழை சென்னை மழை வெள்ளத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.. இயற்கையே இலவசமாய் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது.

இத்தனை நாளாய் கேட்டுக் கொண்டிருந்தவர்கள்
இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்



உளுந்தூர் பேட்டையில் பணத்தை வாரி இரைத்திருக்கிறார்கள்.. அதற்கு பலமுறை மாவட்ட தேர்தல் ஆணையரிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் பலனில்லை, போலிசிடம் போன் செய்தாலும் அவர் பறக்கும் படைக்கு போன் செய்யுங்கள் என்கிறாராம், பணப்பட்டுவாடா செய்தவர்களை பிடிக்க முயன்று பிறகு அவர்களின் பணத்தோடு.. அங்கு குழுமியிருந்த கிராம மக்களையும் தேர்தல் அலுவலரிடம் அழைத்துவந்து போட்டியிடும் பாமக வேட்பாளர் பல கேள்விக்கணைகளை விடுக்கிறார்.... ஆக்ரோசமாக கொதிக்கிறார்.. தெர்தல் அலுவலரிடம் எந்த பதிலும் இல்லை. தேர்தல் அதிகாரிகள் செயலிழந்து தனது இயலாமையை ஒத்துக்கொள்கிறார்கள். பகிரப்பட்ட காணொளி எல்லா உண்மையையும் அப்பட்டமாக சொல்கிறது. வேதனை தான் மிஞ்சுகிறது.
காபந்து சர்க்காரே... இவ்வளவு அராஜகம் செய்கிறது என்றால்... சாதாரண நாட்களில் சர்க்காரை வைத்து என்னென்ன செய்திருப்பார்கள்.
அதனால் தான் தேர்தல் அறிவித்த அக்கணமே இவர்களின் பதவியை முற்றும் பறித்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவந்து தேர்தல் நடத்தினால் தான் ஏதாவது வழி பிறக்கும். அபுஹாசிமா அண்ணன் கூட இதையே நேற்று எழுதி இருந்தார்.
ஜனநாயகத்தை பணநாயகமே நிர்ணயிக்கிறது. சிறுவியாபாரி கொஞ்சம் கூடுதலாக பணம் சுமந்து பிடிபட்டால் பறிமுதல் செய்து தவிக்கவிடும் நேர்மை தவறாதவர்கள் தான் பல லாரி பணக்குவியலை ??? தப்பிக்கவிடுகிறார்கள்.

ஆளும்
அவலத்தை..
அசிங்கத்தை..
ஆணவத்தை...
இனி ஏன் நீ
என்று கேட்கும் மனங்கள்
ஏணிக்கு வாக்களிப்பார்கள்.

இனி விரல் நுனி பேசும்
நனி சிறந்த அரசு வந்தால்
தனி சிறப்பு பெறும் தமிழகம்
பனி விலக பகலவன் உதித்தால்
சனி தொலைவது உறுதி.


1996ல் பர்கூர் தொகுதியில் சுகவணம் எனும் இளைஞரிடம் பரிதாப தோல்வி அடைந்த அப்போதைய தமிழக முதல்வர் யார் தெரியுமா....இப்போ அம்மாவாகிப்போன ஜெயலலிதா தான்.
அப்போது சுகவணம் யானைக்காதில் புகுந்த எறும்பு என்று சிலாகிக்கப்பட்டார்.

2001ல் வேட்புமனு தேர்தல் கமிசனால் நிராகரிக்கப்பட்டு தேர்தலில் நிற்கமுடியாமல் தடுக்கப்பட்டவர் யார்..???
நம்ம டான்ஸி ராணி தானே...

ஒருவர் ஒரு தொகுதியில் நிற்கலாம்..தோல்வி பயம் இருந்தால் இரண்டு தொகுதியில் நிற்கலாம் அதுவே ஏற்க முடியாதது ஆனால் மக்களைப் பற்றி மக்களின் வரிப்பணம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாது இந்திய வரலாற்றிலேயே 2001ல் நான்கு தொகுதிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்த தங்கத்தாரகை யார் தெரியுமா.. அந்த வழக்கு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் யார் மீது நிலுவையில் உள்ளது தெரியுமா நண்பர்களே....
அந்த தங்கத்தாரகை.. தனக்கு குடும்பம் இல்லை என்பதால் மக்களுக்காக???? ஊரை அடித்து உழையில் போட்டு இரண்டு சிறை முறை சென்று புரட்சி செய்து தவவாழ்வு வாழும் நம் ஜெயலலிதா தான்.
(நான்கும் நிராகரிக்கப்பட்டது என்பது வேறு விசயம்)

இது தவவாழ்வின் முற்பகுதி..
1995ல் மக்களுக்காவே வாழ்ந்த அந்த தவப்பொழுதில் தங்கத்தால் இழைக்கபட்ட அப்போதே 100கோடி என பேசப்பட்ட பட்டுப்புடவையை அணிந்து காட்சி அளிக்கும் பிள்ளைகளான நமது தேவையை அறிந்த தாய்.
( முந்தாநாள் வரை யாரென்றே தெரியாத சசியின் 38 வயது அக்காள் மகன் சுதாகரனை திடீரெனெ தெய்வ உதிப்பின் பிரகாரம் வளர்ப்பு மகனாய் அறிவித்து திருமணம் நடத்திய கதையை சொல்லத்தொடங்கினால் தவ வாழ்வின் மகிமை நீளும்.. அதையெல்லாம் பிறகு பார்ப்போம்)

திமுகவுக்கான ஒட்டிமொத்த இஸ்லாமிய ஆதரவு:
முஸ்லிம் லீக் - மமக என்ற கூட்டணி திமுகவோடு அமைந்துள்ளதால் திமுகழகத்திற்கே ஒட்டுமொத்த இஸ்லாமிய ஜமாத்துக்களும் ஆதரவளிக்கிறது, தமிழகம் தழுவிய ஊர் ஜமாத்துக்கள் திமுக வேட்பாளர்களை வெள்ளி தோறும் பிரதான தொழுகைக்கு பின் பள்ளிவாசலின் உள்ளேயே அழைத்துச் சென்று அவர்களுக்கான ஆதரவை நல்கி ஜமாத் மக்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்திருப்பது மகிழ்வளிக்கிறது. அதற்கான ஓர் எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ
(ஜமாத் : இஸ்லாமியர்கள் வாழும் அந்தந்த பகுதிகளின் நிர்வாக அமைப்பு)


மதுவிலக்கை கோரியதற்காக சசிபெருமாளை தற்கொலை செய்து கொள்ள வைத்து அந்த தற்கொலையையும் கேவலமாக பேசியது, பாடகர் கோவனை சிறையில் அடைத்தது, போராட்டம் நடத்திய பெண்களை ஆண் போலிஸை விட்டு தரங்கெட்டு நடக்க வைத்து அடித்து துன்புறுத்தியது, மூன்று வயது பெண்குழந்தைகள் மீது கூட FIR பதிவு செய்தது எல்லாம் இந்த படிப்படி ராணிதான்.

நெல் கொள்முதலுக்கு அதிமுக அரசு அறிவித்த எந்த தொகையும் அமலுக்கு வரவில்லை எல்லாம் வெற்று வாய்ஜால அறிவிப்புகளே.. அதிமுக வேட்பாளரை இடைமறித்து கேள்வி கேட்டு ஊருக்குள் விடாத விவசாயிகள்.

திருவாரூர் தொகுதிக்கு கொண்டு செல்ல அப்படியே அச்சு அசலாய் தயாரிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட போலி வாக்கு இயந்திரங்கள் வாகன சோதனையின் போது பூண்டியில் அதிமுகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
# அடக்கேவலமே இதெல்லாம் ஒரு பொழப்பா..

ஒவ்வொரு மாவட்ட கலெக்டருக்கும் இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக்- கடைகளை பள்ளிக்கூடம், மருத்துவமனை, குடியிருப்பு பகுதி என எல்லா இடங்களிலும் பரவலாக்கிய ஜெ. படிப்படியாக என சொல்வதெல்லாம் கபட நாடகமே.
  
"கடவுளின் நிலம்" எனச்சொல்லப்படும் கேரளாவை சோமாலியா என்று சொல்லும் மிஸ்டர் 56" தான் மூன்று முறை ஆண்டு ஒரிஜினல் சோமாலியாவை விட மோசமான குஜராத்தை உலகத்திலேயே தன்னிறைவடைந்த மாநிலம் என புரட்டு கூறி வெளிநாட்டு புகைப்படங்களையெல்லாம் இது தான் குஜராத் என நாட்டு மக்களை நம்பவும் வைத்து பிரதமராகவும் ஆனவர்.
  
திருமா, வைகோ, கம்யூனிஸ்ட்கள் எல்லாம் ஊர் ஊராய் சுற்றி வாக்கு சேகரிப்பதை ஒரு சில நிமிடங்களில் தன் கோமாளித்தனத்தால் கலைத்து எறிகிறார் கேப்டன். கூட்டமே கேலியாக பார்த்து சிரிக்கிறது. மேடையேறியதும் கட்சிக்காரர்கள் கூட்டணிகட்சிகள் எல்லாம் என்னென்ன நடக்க போகுதோவென நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டு பதை பதைத்துப் போகிறார்கள்.
நேற்று நடந்த மாநாட்டில் திருச்சி சார்ந்த தொகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி சில குறிப்புகள் தரப்பட்டது, அதை படிக்கத்திணறி பின்பு எழுத்துக்கூட்டி படிக்க முயன்று அதுவும் முடியாமல் போக இடையிடையே பலபேரிடம் கேட்டு கடைசியில் போதும் கேப்டன் முடிச்சுக்கங்கோ என்று மேடையில் பின்னால் இருந்து குரல்வர எதுவுமே பேசாமல் நன்றி வணக்கம் என்கிறார்... பேசத்தான் தெரியவில்லை, படிக்கத்தான் தெரியவில்லை, எழுத்துக்கூடவா தெரியவில்லை என கூட்டமே விதியை நினைத்து நொந்துகொள்வதை அவர்களது முகமே காட்டியது ... இடையே கெயில் திட்டம் பற்றி எழுதி இருக்க கெயில்!!! அப்படின்னா என்னண்ணே என்று வைகோ பக்கம் திரும்புகிறார்..????? இந்த லட்சணத்தில்ல் பிரச்சாரத்திற்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது
கட்சிக்கு அப்பாற்பட்டு எதார்த்த நிலையில் கலைஞரைபார்த்தால் 93 வயது முதிவர்இப்போதும் கூட மேடைப்பேச்சு, வேட்பாளர் அறிமுகம், செயல்திட்ட வரைவு அறிக்கை வாசித்தல் என எல்லாவற்றிலும் அவரது கவனமும், திறமையும், ஆற்றலும் இன்னும் சிறப்பாக இருக்கிறது இப்போதெல்லாம் நம் கண் முன்னேயே கொஞ்சம் வயதானால் கூட நிதானம் இழந்து உற்சாகமற்று காணப்படும் மனிதர்களை சர்வ சாதாரணமாக பார்க்க நேரிடும் சூழலில் கலைஞரை பிரமிப்பாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

கடந்த கால வரலாறுகளைப்பார்த்தால் ஜெயலலிதா பெற்ற மூன்று தேர்தல் வெற்றியும் அவராலோ அவரது ஆட்சியின் சாதனையாலோ பெறப்பட்டது அல்ல.. மற்றவர்கள் மேல் பழி போட்டு அனுதாபத்தால் ஜெயித்ததே. (பழைய தேர்தல் காரண உதாரணங்கள் ராஜிவ் கொலை, ஈழப்போர், மின்சாரம்)

அரசியலைப்பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அனேக பேர்களால் தான் இந்திய அரசியலில் ஆட்சி அதிகாரம் முடிவு செய்யப்படுகிறது.
சின்னம், தலைமையின் வசீகரம், அம்மா தாயே ஓட்டுப்போடுங்கமா எனும் கூழை கும்பிடு, உங்கள் வீட்டுப்பிள்ளை என்பன போன்ற பிரச்சாரங்கள், ஓட்டுக்கு காசு, ஒரு பாட்டில், பிரியாணின்னு சொல்லும் ஒரு பீசு கூட இல்லாத குஸ்கா பொட்டலம் இன்னும் இத்யாதி.. இத்யாதிகளால் இவர்களை மடக்கிவிடலாம்.

"போன தேர்தல்ல அந்த கட்சியில தலைக்கி 800 ரூவா, இந்தா... இந்த கட்சிலேந்து தலைக்கி 500 ருவான்னு குடுத்தாங்கே.. இந்த தேர்தல்ல தான் இல்லாம போயிட்டோம்..இருந்திருந்தா எப்புடியும் 2000 ருவா சம்பாதிருச்சுருப்பேங்.." என்று மிக கவலை தோய சொல்கிறார் ஊரில் இருந்து வந்த ஒரு மருத காரர்.
நான் கேட்டேன்... "இந்த கட்சியில வாங்கிட்டு அந்த கட்சியிலயும் வாங்குனா.. அவெங்கெ சும்மா இருப்பாஙெலா"ன்னு.. அதுக்கு அவர் சொன்னார்.. "சத்தியமா உனக்கு தாண்ணே நம்ம ஓட்டு.. வக்காலி அவங்கெடக்கிறான்னு சூடத்த அணச்சுடுவேன்ல்ல"

ஆற்றை பாதுகாக்க, காற்றை பாதுகாக்க, காட்டை பாதுகாக்க, கனிம வளத்தை பாதுகாக்க, மனித வளத்தை மேம்படுத்த, அபாயமளிக்கும் வேதிப்போருட்களின் பயன்பாட்டை தடுக்க, மரம் நட, ரியல் எஸ்டேட் அத்த்மீரல்களை களைய எந்தெந்த கட்சிகள் வாக்குறுதி அளித்திருக்கிறது.

பாவம் கிழவி... ஆனாலும் பலே அரசியல்வாதியாயிருக்கும் போல..
ஏம்பா.. கட்சி விளம்பரம் படம் எடுக்கற்துக்கு முன்னே "..கெய்வி அந்த கச்சிக்கு ஏதாச்சும் நடிச்சி குடுத்தியா"ன்னு கேட்றிக்ளாம்பா..!
ஓரே கிய்வி.. ரெண்டு வெய்ம்பரம்.

எல்லோரும் வெற்றி வேட்பாளருன்னு தான் சொல்லிக்கிறாங்கே..ஆனா வெற்றியின் வேட்பாளர் யாருன்னு தான் தெரில!
அந்த கடைசி நேரம் வரைக்குமான திரில்லிங் தான் இன்ரெஸ்ட்டிங்.

அரசின் அவலநிலை
ஆணவத்தின் விலை
அரசியின் இலை
இனியாள வாய்ப்பிலை

ஜெ. அடிமைகள் சொல்லுக்கு சொல் "புரட்சித் தலைவி.. இதய தெய்வம்.. மாண்புமிகு அம்மா" என்கிறார்கள்.
புரட்சி தலைவியோ சொல்லுக்கு சொல் ஏன் எழுத்துக்கு ஒருமுறை எனும் அளவுக்கு திரு.கருணாநிதி.. திரு.கருணாநிதி.. திரு.கருணாநிதி.. திரு.கருணாநிதி.. திரு.கருணாநிதி.. என்றே ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கிறார்.. திருவை இப்போது சேர்த்திருந்தாலும் கருணாநிதி என்பது அவரது அனிச்சை சொல்லாக பரிணமித்திருக்கிறது.
இப்போதெல்லாம் போயஸ் தோட்ட இல்லத்தின் சுவர்களில் கூட கருணாநிதி... கருணாநிதி என்ற பெயர் தான் ரீங்காரமாய் எதிரொலிக்கிறதாம்.
அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் உறக்கம், விழிப்பு, நினைவு, கனவு, ஊன், உணர்வு இவற்றிலெல்லாம் சசியை விட நெருக்கமாய் இருக்கிறார் கலைஞர்.
அவரின் பெயரை உச்சரிக்காமல் தமிழ்நாட்டு அரசியல் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஜெ.
# தட் ஜெயா டிவி தொறந்தாலே... அபச்சார பிரச்சார மொமெண்ட்.

எல்லா கலோபரங்களும் 16ஆம் தேதி முடிவுக்கு வரும்.

உங்கம்மாவுக்கு தமிழர்கள் இம்முறை ஓய்வுப்பிச்சை அளிப்பார்கள் சரஸ்!

இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிடாமல் எல்லோருடைய தேர்தல் அறிக்கை வந்த பின் சுயமூளையின்றி சென்ற முறை திமுக தேர்தல் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்தது போல இம்முறையும் செய்து இப்போது தான் வேளியீடு பற்றிய செய்தியை அப்படியும் இப்படியுமாக வெளியிடுவதிலேயே ஜெ.யின் கள்ளத்தனம் அப்பட்டமாக தெரிகிறது.

NRI ஓட்டு:
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை செலுத்த இதுவரை எந்த வித வாய்ப்போ அல்லது வழிமுறையோ செய்து கொடுக்கப்படவில்லை கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை எத்தனையோ கோரிக்கைகள், பாராளுமன்ற கவன ஈர்ப்புக்கள் என எத்தனையோ செய்தும் ஆனது ஒன்றும் இல்லை, ஆனால் இந்த ஆண்டு அப்படி ஓர் வழிவகை இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி ஒன்று இருப்பதற்கு இதுவரை எந்த முகாந்திரமும் தென்படவில்லை என்பது எதார்த்தம்.
ஆனாலும், ஆன்லைனில் எவ்வளவோ வசதிகள் வந்திருக்கும் போது இணையப் பரவல் அங்கிங்கெனாதபடி தன் அதீத வல்லமையை காட்டிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்/தமிழர்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இந்திய தூதரம் சென்று அவர்தம் வாக்குரிமையை செலுத்துவது என்பது கண்டிப்பாக எல்லோராலும் முடியாது சொல்லப்போனால் 99 சதவீதம் நடைமுறை சிக்கல் இருக்கும் செயல்பாடு. ஆதலால் என்றைக்கு நம் இந்திய தேர்தல் ஆணையம் சூப்பர் சிங்கரில் ஓட்டுப்போடுவது போல ஆன்லைன் ஓட்டு முறையை கொண்டுவருகிறார்களோ அப்போது விரிந்த இப்பூமியில் பரந்திருக்கும் மரத்தமிழர்கள் எல்லோரும் ஓட்டளிக்கக் ஏதுவாகும்.
அப்படி ஓர் வாய்ப்பு இந்தமுறை அமைந்திருக்குமானால் திமுகவின் வாக்கு எகிறும் என்பதில் எள்முனையளவு சந்தேகம் இருக்காது. தேர்தல் ஆணையம் நினைத்தால் ஒரு நொடி தான், அவ்வளவுக்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஆகையால் இதுவும் ஒருவகை அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஜனநாயக திருட்டு என்றே கருதத்தோன்றுகிறது.
இதை படித்துவிட்டு form 6A வை டவுன்லோடு செய்து அப்படி ..இப்படி என பாடம் எடுக்க வேண்டாம் ஏதும் எளிதான வழிவகை இருந்தால் தெரிவியுங்கள்.


விரைவில் மதிமுக சார்பில் "மதிமுகம்" சேனல் ஆரம்பமாமே.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசு கேபிள்களில் ஜெயா டிவி தவிர வேறு செய்தி சேனல்களை ஒளிபரப்ப மறுக்கின்றனராம், பரவலாக செய்திகள் வருகிறது.
காலையில் அண்ணன் அபுஹாசிமா கூட எழுதி இருந்தார். மூனு நாளா அம்மையார் மட்டும் தான் ஒத்த ஆளா மேல் மேடையில் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சேரில் அமர்ந்து பிரச்சாரம் செய்கிறாராம். ஒரே மொகத்த பாத்து பேயறஞ்ச மாதிரி இருக்குங்கிறார்.
இதை கனம் லக்கானி அவர்களிடம் யாராவது தயவு பண்ணி கொண்டு போங்க ராசா.

இந்தம்மா.. இவ்ளோ மீம்ஸ்க்கு அப்புறமும்
"
செய்வீர்களா..நீங்கள் செய்வீர்களா"ன்னு திரும்பவும் ஆரம்பிச்சிடுச்சே!
கவுண்டமணி பாணியில
"
ஐயோ ராமா.. இந்த்க கொசுத்தொல்ல தாங்க முடியலயே"ன்னு கத்த தோணுதே!

தந்திடிவிக்காரன் ஒரே பகீர் தந்தியா அடிக்கிறானே...ஒன்னும் புரியலயே..!
எழவு தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ex.நமீதாட்ட ஆச்சிய கொடுக்காம இருந்தா சரி!
என்ன செய்யப் போறாங்களோ..! ஆத்தா...!!

கொஞ்சங் கூட கூச்ச நாச்சமே இல்லாம தவ வாழ்வாம்.. செத்த சவத்தைவிட நாத்தம்பிடிச்ச வாழ்வுக்கு பேர்...!!!
நாலு அடிமை அமைச்சர்கள் அடிமரமா சாஞ்சா உலகமே இருண்டதுன்னு அர்த்தமா..?
என்னமோ போங்கெ!
டமீழா டமிழா நாளை உன்னாளே!

முகநூலில் அவரவர் பக்கத்தில் எதையும் பகிர கனம் மார்க் அவர்களே உரிமை வழங்கியிருக்கும் பட்சத்தில் திமுக-வை ஆதரித்து இடுகை இட்டால் மட்டும் தமிழ்நாட்டின் தலைவிதியையே தலையில் தாங்கிநிற்கும் கனவான்கள் ஏதோ ஒரு சமூக குற்றத்தை எட்டுத்திக்கும் ஏவிவிட்டதைப் போல இடிந்துரைக்க வருகிறார்கள்!
என் பக்கம்!
என் உரிமை!!
என பிரபுவைப்போல் பிரகடனம் செய்து தொலைக்க வைத்துவிடாதீர்கள்..

ஆட்சிக்கு வந்தால் மதுவை படிப்படியாக குறைப்பேன் என்கிறார் ஜெயலலிதா எப்போது மரக்கால்..மரக்காலாக குறைப்பாராம்..???
- மயிலாடுதுறையில் கலைஞர்
காட்டாட்சியும், கண்காட்சியுமே நடக்கிறது நமக்கு தேவை நல்லாட்சி
-
மயிலாடுதுறையில் கலைஞர்

மயிலாடுதுறையில் மிகச்சிறப்பான உரையை நிகழ்த்தி முடித்திருக்கிறார் கலைஞர், நாளைக்கு சமூகவலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இதுவே பிரதான விவாதப்பொருளாக இருக்கும்.
  
பொய்யை மெய்யாக திரித்தும்
மெய்யை பொய்யாக திரித்தும்
நீட்டி முழக்கி விவரிக்க தெரிந்த
காட்டானின் விளக்கத்தை
கூட்டிவைத்து கேட்டுகொண்டிருந்தது
நாட்டு நடப்பு சொல்லும் சேனல்
காட்டானோ அவன் கைவந்த கலையை
பாட்டாய் பாடிவிட்டு போனான்
தேட்டமாய் பார்த்து திவ்யதரிசன மெய்தியதாய்
கூட்டமொன்று இங்கே கூவித்திரிகிறது காண்.

வாய்ப்பேச்சு வீரன் தொலைக்காட்சியில் வலைவீசிக் கொண்டிருக்கிறான்

நேரம் பார்த்து ஆப்படித்த கோவன்:
நேத்து சன் டிவில போட்டாங்க... ஃபர்ஸ்ட் லுக்கிலேயே புடிச்சிப் போச்சு.
சில மாதங்களுக்கு முன் மதுவிலக்கு பாடலுக்காக ஜெ. யால் கைதான கோவன் மீண்டும் ஒரு செம சாங் வெளியே விட்டிருக்கிறார். மனுசன் ரெண்டில் ஒன்னு பாத்துடனும்ன்னு சும்மா வெளாசி தள்ளியிருக்கிறார். ரகளையான அந்த பாடலை கண்டு அதிமுக வட்டாரங்கள் பம்மிப்போய் கிடக்கிறதாம்.
நீங்களும் ஒரு தரம் கேட்டா மீண்டும்.. மீண்டும் கேட்பீர்கள்.. கைது செய்ததற்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்திருக்கிறார் கோவன்.
தேர்தலுக்கான மிகச்சிறந்த அதிமுக ஆப்பு சாங்.
இன்னொரு முறை கேளுங்க..!

போகாதே.. போகாதே..
ஜெ. கூட்டத்துக்குக்கு போகாதே
சாகாதே.. சாகாதே..
வெயிலில் நீயும் சாகாதே!
அவா கொடுக்கருது பிரியாணியே அல்ல
நம்பி நீயும் வேகாதே!
இரநூறு ரூவாய்க்காக
இன்னுயிரை நீயும் இழக்காதே!

இனவாதம், மொழிவெறி, அடக்குமுறை, ஆணவப்போக்கு இவற்றுக்கு எதிராக போராடி தலையெடுத்தது திராவிட இயக்கம் ஆனால் அதையே பெயரில் வைத்துக்கொண்டு அத்தனை அராஜகத்தையும் செய்யும் பாசிச வெறிபிடித்த பேயிடம் ஆட்சியை கொடுத்த தமிழர்கள் இம்முறையாவது விழித்துக்கொள்ள் வேண்டும்.
இல்லையென்றால் ஓட்டு கேட்க வரும் போதே கொல்பவர் ஓட்டை பெற்றுக்கொண்டு நாட்டை அழிப்பார், செம்பரபாக்கம் ஏரியை திறந்து விட்டதைப் போல.

மக்களெல்லாம் செத்துப்போயிட்டா யாரு தாயி ஓட்டு போடுவா..
சாகடிச்சு.. சாகடிச்சு இப்பிடி வெளயாடுறியே!
ஆரம்பமே எழவுன்னா.. முடிவும் எழவு தான் ஆத்தா.
இன்றும் ஜெ. கூட்டத்துக்கு போனவர்ல ஒருத்தர் வெயில் தாங்காம செத்துப்போயிட்டாராம்! கூட்டிட்டுப்போனா.. எவ்வளவு கெஞ்சினாலும் வெளியே விடமாட்டாய்ங்களாம்.. தண்ணின்னு அழுது கேட்டாலும் கிடையாதாம். அம்மா போனபின்னே தான் வெளியே விடுவோம்ன்னு ஒரே அராஜகம் தானாம்.. 
கேப்டன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் சொல்கிறதே!
@ பாதுகாவலரை பதம் பார்த்தார் கேப்டன்

ஓட்டுக்கேட்க வந்த அதிமுக அமைச்சரை பொதுமக்கள், பெண்கள் சுற்றி வளைத்து முற்றுகை.

நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் 6.3.1947ஆம் ஆண்டு நடந்த நிதி நிலை அறிக்கை மீது விவாதம் நடந்தபோது மதுவிலக்கு கோரி வாதம் செய்தார். அப்போது அவர் பேசியது
மதுவிலக்கால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும் என்பது ஒரு சிலரின் வாதமாகும். ஆனால் எந்த ஒரு அரசும் மக்களின் தீய பழக்கங்களையும், சமுதாய சீர்கேடுகளையும் வளரச்செய்து தமது வருமானத்தை பெருக்குவதற்கு பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவுப்படுத்துகிறேன். எவ்வளவு வருமானம் வந்தாலும் அல்லது எவ்வளவு வருமானத்தை இழந்தாலும் மக்களின் நல் வாழ்விற்கு குறுக்கே நிற்கின்ற தீய பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு எந்த அரசாங்கமும் தயங்கக் கூடாது என்பதே எனது வாதமாகும்என்று தமது நீண்ட உரையில் கூறினார்கள்.
1984ஆம் ஆண்டு சிராஜுல் மில்லத் சட்டப்பேரவை விவாதத்தில் அவர் பேசியது
அவையின் முன்னால் கொண்டு வரப்பட்ட இருக்கக் கூடிய இந்த மதுவிலக்கு திருத்தச் சட்டத்தை அரசு அன்புகூர்ந்து திரும்பப் பெற்று மதுவை ரத்து செய்வதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் மெத்த பணிவுடன் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்".

தேர்ந்தெடுக்கும் அரசு மக்கள் சேவகம் செய்யவே.. சர்வாதியாரியை மிஞ்சும் ஆணவநோக்கோடு திமிர்பிடித்தலைய அல்ல..
அப்படி என்ன நீ உயர்ந்தவளாகிவிட்டாய்..??? இந்த ஒன்றிக்காகவே ஜெ. புறந்தள்ளப்பட வேண்டும்.

நாட்டிலேயே மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வராகப் பெயர் பெற்ற ஜெயலலிதா, இந்தத் தேர்தல் காலத்திலும்கூட நாட்டு மக்களின் சூழலை நேரடியாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாலை வழிப் பிரச்சாரப் பயணம் என்பது வெவ்வேறு பகுதி மக்களை அவர்களுடைய நேரடி வாழ்க்கைப் பின்னணியில் சந்திப்பதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல; ஊர் சூழல் எப்படியிருக்கிறது, மக்களின் வாழ்க்கைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. தன்னுடைய பெரும்பான்மைப் பயணங்களை ஹெலிகாப்டர் வழியாகவே திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா இப்போதும்கூட உண்மையான உலகத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.
-சமஸ் கட்டூரை, இந்து நாளிதழ்

மக்களின் ஏழ்மை, அறியாமை, அடிமைகுணம் இவற்றைப் பயன்படுத்தியே நம் அறியாசனங்கள் அமைக்கப்படுகிறது. முறையான விழிப்புணர்வு பெற்ற சமூகமாக நம் தேசம் மாறப்போவது எப்போது... இந்த கூறுகெட்ட தேர்தல் முறை மாறப்போவது எப்போது..? நம் நாட்டின் தேர்தல் என்பது முறைபடுத்தப்பட்ட ஜனநாயக வழியிலான சூறையாடல் மட்டுமே.

17 April · 
ஆங்கிரி பேர்ட் எல்லாம்
அரியணைக்கு ஆசைப்படுகிறது.
வெண்ணீர் வைக்கவே வராதவர்கள்
ஊருக்கே விருந்து போடுவார்களாம்
ஊரையடித்து உலையில் போட்டு
ஊருக்கு ஊறு செய்யவே உத்தேசம்!
புருசனை அரசனாக்கி
வருசம் ஐந்திற்குள்
மனக்கோட்டை எங்கும்
பணக்கோட்டை எழுப்பவே
முரசு கொட்டுகிறார்!
ஓரு பேயை விரட்டவே
அல்லல் படுகிறோம்,
மறு பேய்வேறு நம் மார்பிளந்து
ஈவிரக்கமின்றி ஈரல் திண்ண வருகிறதாம்
மக்களே உஷார்!

16 April · 
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே..
அசால்ட்டாக வசனம் பேசி அந்தரங்கத்தில் பறந்து சண்டைபோட்ட விஜயகாந்த் எப்படி பாதிக்கப்பட்டு சர்வநாடியும் அடங்கிக் கிடக்கிறார் என்பதை பார்த்தாவது பிரமலதா மாஃபியாக்களிடம் தமிழகத்தை தாரை வார்த்துவிடாதிருங்கள்.
நேத்திக்கி கூட ஏதோ அந்தம்மா மாவீரர் சத்தாம் ஹுசனை பத்தி ஏடாகூடமா பேசிடுச்சாம்..பிராது வந்திருக்கு. பத்து சூதனமா ஓட்டுப்போடுங்க மக்களே.

15 April · 
போர்களமாய் இருக்கும் என நினைத்தால் ஜெ.யின் தேர்தல் பிரச்சாரம் படு போர்.. கூடுதல் குறைவில்லாமல் சமதள கோடாய் முன்பை விட வெறுப்பேற்றும் வகையில் தான் செல்கிறது உரை. அதிலும் கரகரப்பு வேறு குரலில்.. அதுவெல்லாம் கலைஞருக்கு தான் ஸ்டைல். ஜெ.விற்கு பதில் விந்தியா.. ஆர்த்தி போன்றோருக்கு ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுத்து பேசச்செய்தாலே அக்கட்சிக்கு சேமம் விளையும். அம்மையாரே தொடர்ந்து பேசினால் சகித்துக்கொள்ள முடியாமல் இன்னும் பல சாவுகள் தான் கூட்டத்திலேயே நேர சாத்தியக்கூறுகள் அதிகமெனப்படுகிறது.
# இந்த பேச்சுக்கா 40 ஏக்கர் நெலத்த பாழாக்கி ஹெலிபேட் போட்ட... ஐயோ ஒர்த்தே இல்லியேங்கிறான் வாக்காளன்.

14 April · 
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக "வெளிச்சம்" வெற்றியடைய அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துகிறேன்.

13 April · 
இன்னுமா நமக்கு கோபம் வரவில்லை?
மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி இப்படி கொத்தடிமைகள் போல அவர்களை அடைத்து கொல்லும் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் உங்களுக்கு வேண்டுமா?
அதிமுகவை தோற்கடியுங்கள்.

12 April · 
93 வயதிலும் தளராத உங்கள் துடிப்பையும் நெஞ்சுரத்தினையும் கண்டு வியக்கிறோம், வெற்றி நமதே.
இந்த வயதில் தமிழகமெங்கும் தொடர்வண்டிப்பயணமும், வேன் பயணமும் எவ்வளவு சிரமம் என்று எதார்த்தமாக சிந்திப்போருக்கு தெரியும்.
உண்மையில் கலைஞர் ஓய்வறியா சூரியன் தான்.

11 April · 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வழக்கறிஞர் ஜீவகிரிதரன் அவர்களை வேட்பாளாராக அறிவிக்க பலர் விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சார்.
********
நான் விரும்புகிறேனோ இல்லையோ கட்சி விரும்புகிறது...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன் பெயரிலேயே "முஸ்லிம்" என கொண்டிருந்தாலும் தான் பெற்றது அய்ந்தே தொகுதிகள் என்றாலும் அதில் ஒன்றில் முஸ்லிம் அல்லாதவரை வேட்பாளராக்க விரும்புகிறது... இதுதான் முஸ்லிம் லீக்... இதுதான் மதச்சார்பின்மையின் அடையாளம்...
Jeeva Giridharan

11 April · 
ஜெயா- வை எதிர்த்து குஷ்பு போட்டி என சொல்லப்படுகிறதே.. ?

11 April · 
அகங்காரமும், ஆணவமும் இருக்கும் முதலாளி ஜெயலலிதாவுக்கு சேவகம் செய்வதால் தனக்கு ஆதாயம் என்று அரசியல் தொழில் செய்யும் வேட்பாளர்கள் ஆதரிக்கலாம், ஆனால் ஜெ.வை மக்கள் ஆதரிக்கலாமா..???
ஜெ. மீண்டும் வந்தால் தமிழனை விட அடிமை சேவக புத்தியுள்ளவன் யாருமில்லை.
தமிழா உன் கூண் நிமிரட்டும்.
அதிமுக ஆட்சி முடியட்டும்..
தமிழகம் விடியட்டும்.

11 April · 
திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன்...

10 April · 
தாய்ச்சபை முகநூல் இளைஞர்களுக்கு...
நண்பர்களே தேர்தல் காலத்தில் நிறைய நிகழ்வுகள் நடக்கும், தயவு செய்து உணர்வுக்கு வயப்பட்டு விட வேண்டாம், மனம் தளர்ந்தும் விடவேண்டாம் நம் கட்டுப்பாடு மற்ற இயக்கங்களுக்கு முன் உதாரணமானது. அனுபவமும், முதிர்வும், எதார்த்தமும் கொண்ட தலைமை எதை எப்போது யாருக்கு செய்யவேண்டும் என அறிந்தது. எல்லோருக்கும் பல கனவுகளும், நோக்கமும் இருக்கும் காலமும் நேரமும் கனிந்துவர வேண்டும். விரக்தியோ அல்லது பொறுமை இழப்பதோ அழகல்ல.. எல்லா கட்சியிலும் தலைமை, செயற்குழு, தேர்தல் குழு என இருக்க அவையே இறுதி முடிவெடுக்கும். தான் நினைத்தது தான் நடக்கவேண்டும் என்ற எண்ணம் வேண்டாம்... இன்றை விதைத்தால் நாளை உறுதி.
வெற்றியை நோக்கி பயணிப்போம்.

9 April · 
ஜெ.போல பெண் ஹிட்லரை நான் பார்த்ததில்லை, மனிதர்களின் ஆசைகளில் தேரோட்டும் வித்தை தெரிந்தவர், இந்தியாவிலேயே இல்லாத அடிமை மனோபாவ ஆட்சி மீண்டும் வரக்கூடாது - பழ.கருப்பையா
9 April · 
RK நகர் சட்டமன்ற தொகுதியில் பண பட்டுவாடா ஜெகஜோதியாக நடைபெரும் வீடியோ காட்சி.
"சாமி... சாய்ந்தரம் அம்மா கூட்டத்துக்கு ஆளுங்கள கூட்டியார இது ஓகே, ஆனா ஓட்டுப் போட இது பத்தாது.. கொஞ்சம் அடுத்தடவ போட்டு கொடுக்கனும் சரிங்களா சாமிய்ய்.."
" வாடி வனஜா ரெண்டு மணிக்கெல்லாம் ரெடியாயிடு எப்டி தான் வெயில்ல ஒக்காரப்போறோமோ எழவு எரணூறு ரூவாக்கி"

8 April · 
முஸ்லிம் லீக் தொகுதி பட்டியல்

7 April · 
பிரபல இஸ்லாமிய பாடகர் நெல்லை எஸ்.எம். அபுல்பரக்காத் சமுதாயத்தின் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் முறைப்படி இணைந்தார். நன்றி : மணிச்சுடர் தமிழ் நாளிதழ்
சற்று முன் தொலைபேசியில் கூட என்னிடம் "சமுதாயத்தின் தாய்ச்சபையில் சேர்ந்தது எனக்கு பெருமை அளிக்கிறது. எனெனில் சமுதாய இயக்கங்களில் அமைதியான இயக்கம் சமூகத்திற்காக அயராது சத்தமின்றி உழைக்கும் இயக்கம் அது தான்" என்றார்.
மேலும் தலைவர் முன்னிலையில் 'இது தான் நாங்கள் செய்த துரோகமா இல்லை வகுப்பு வாதமா' என்ற பாடலை பாடிக்காட்டினேன் என்றார்.
வாழ்த்துக்கள் அருளிசை அரசு அபுல் பரக்காத் ஜி!
7 April · 
இதுவரை நடந்த தேர்தல்களில் 2016 சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கிறது. அரங்கங்கள் அதிர தினமும்நடிகப்பெருந்தகைகள் அற்புதமாக அசால்ட்டாக நடித்து தமிழக மக்களின் கவன ஈர்ப்பை பெறுகிறார்கள். இன்னும் மெயின்ரோல்களான அம்மையாரும்.. அய்யாவும், கேப்டனும், ஸ்டாலினும் வரவே இல்ல.. வந்தவுடன் இன்னும் இருக்கு.
இதுவரை அரசியல் அரங்கின் காமெடிகள் அனைத்தின் மொத்த குத்தகையையும் வைகோவே தன்வசம் வைத்திருக்கிறார். அதிலும் எப்போதும் விஜயகாந்த் செய்யும் வேடங்கள் இப்போது வைகோ ஏற்றிருப்பது 2016ன் எலெக்சன் ஸ்பெசலாக பார்க்கப்படுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் திருமா தான் எல்லா மேடைகளிலும் செய்வதறியாது நெளிந்து கொண்டிருக்கிறார் என்பதை அவதானிக்க முடிகிறது.

7 April · 
வைகோ சில வாரங்களாக பேசிவருவது எதார்த்தத்தை மீறிய மலிவு அரசியல் என்பது அவரை உற்று நொக்கிவரும் எல்லோரும் அறிந்ததே, நேற்றைக்கு அவர் பேசிய பேச்சு மிக கண்டிக்கதக்கதும் அருவெறுக்க தக்கதும் தான் ஆனால் நெஞ்சு உறுத்தியதோ என்னவோ உடனே கீழிறங்கி தான் செய்தது வாழ்நாள் தவறு என்றும் இதை தாயுள்ளத்தோடு மன்னிக்க வேண்டுகிறேன் என்றும் சொல்லி இருந்தார். இதையும் ஒரு அரசியலாகவே பார்த்தாலும் இதுவரை எவரும் இப்படி இறங்கி வந்ததில்லை. அதற்காகவாவது மென்மேலும் அவரை தரக்குறைவாக சிலாகிப்பதை தவிர்க்கலாம்.
பார்க்க வேண்டிய காமெடிகளும் உணர்ச்சிவசப்படும் வீராவேசங்களும் இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது மக்களே.. ப்ளீஸ் கூல்.

6 April · 
இந்தி ஆதரவு பாஜக வானதிக்கு சரியான பதிலடி
தமிழை எப்படி தமிழ் நாட்டில் திணிக்கலாம் என்று இந்திக்கு வக்காலத்து வாங்கும் பாஜகவின் வானதிக்கு சரியான பதிலடி கொடுக்கும் தோழர் தியாகு. பாஜகவிற்கு ஏன் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு மற்றுமொரு சான்று.

5 April · 
இஸ்லாமியர்களை பகடைக்காயாக பயன்படுத்தி சாக்கடை அரசியல் செய்வதில், மார்க்க வியாபரம் செய்வதில் தரங்கெட்ட ஜமாத்க்கு ஈடு இணை ஏதுமில்லை, மைக் பிடிக்க காத்திருக்கும் ரவுடிகள் தங்கள் கைவரிசையை வெகுவாக காட்டி உசுப்பேற்றுவார்கள். கேட்கும் செம்மறிக்கூட்டங்கள் தாண்டிக்காட்டியது போலவே சிந்திக்காது தாண்டும்,
இணக்கத்தை ஏற்படுத்துவதும், சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துவதுவெல்லாம் முஸ்லிம் லீக் போன்ற பண்பட்ட கட்சிகளுக்குத்தான் பழக்கம்.
சமூகம் நாறிகிடந்தால் தானே நாதாரிகள் பிழைக்க முடியும். இவர்களின் செல்வாக்கு??? சமூகத்தின் அவலத்தை பிரதிபலிக்கிறது.
நாய்பிடிக்கும் கார்ப்பரேசன் வண்டிகள் வெற்றாய் தான் உலவுகிறதாம்.
அசத்தியம் ஒழியட்டும்.

31 March · 
இந்த வயதிலும் இப்படியொரு உற்சாக அதிர்வலையா என எட்டுத்திக்கும் எதிரிகள் பதைபதைக்க...
இதோ புறப்பட்டுவிட்டது 93 வயது இளையசூரியன் உதயசூரியனின் ஆட்சியமைக்க..!
கலைஞரின் ட்ரைல் ரைடே இப்பூடி பீதிய கெலப்பினா.. மெயின் ரைடுக்க்கெல்லாம் என்ன பண்ணுவாய்ங்களோ..!

27 March · 
வைகோ - திமுக க்ளாஸ் தான் தமிழ் நாட்டில் இப்போ ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது, டிவி, சமூக வலைதளம், எஃப்.எம். ரேடியோ என எதைத்திறந்தாலும் அதுவே விவாதப்பொருள்.. இப்போ எனக்கு என்ன சந்தேகம்ன்னா..
அரசு செய்த ஒன்றுக்கு எதிர்ப்பை காட்டுகிறேனென செய்யப்படும் பெரும்பாலான போராட்டங்களில் போராட்டத்தின் கருப்பொருளே மாறி போராட்டக்காரர்களுக்கும், போலிஸ்காரர்களுக்குமான கலவரத்தில் வந்து நிற்கும், அரசோ வேடிக்கைப்பார்த்து குளிர்காயும் அது போலவே மாற்று அரசியல் என முன்னெடுத்த மநகூ-யினர் ஆதாவது இன்றைய கேப்டன் அணியினர் ஆண்டு கொண்டிருப்பது அதிமுக என்பதையே மறந்துவிட்டு ஏதோ நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை அகற்றியே ஆகவேண்டும் என்பது போலவும் நீ தான் நீ மட்டும் தான் பிரதான எதிரி என்று எதிர்த்து போர் முரசு கொட்டுவதும், குற்றச்சாட்டால் கூக்குரல் இடுவதுமான போர்கள காட்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதை மேல் தளத்திலிருந்து அதிமுக வேடிக்கை பார்த்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் எதற்காக இப்படி உழைக்கிறீர்கள் என மக்களுக்கும் உங்கள் நோக்கம் புரிய தொடங்கி இருக்கிறது. ஆழ்ந்த வாழ்த்துக்கள்!.


26 March · 
சூழ்ச்சி
பெய்ப்பிரச்சாரம்
கள்ள நோட்டு
கருப்புப் பணம்
கபடநாடகம்
அற்பத்தனம்
அட்டூழியம்
சந்தர்ப்பவாதம்
இவைகளின் பெருமுதலீட்டில்
லாப நஷ்டக்கணக்குகளின்
வியாபாரப் போட்டிகள்
அறிவிக்கும் வெற்றிகளின்
முடிவில் உருவாகிறது
தமிழர்களின்அரியாசனம்.

25 March · 
முஸ்லிம் லீக்- தொடர்ந்து மமக-வுக்கும் 5 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது திமுக.
வாழ்த்துக்கள், ஒரு மாதத்திற்கு முன்பே கலைஞரை சந்தித்து முதன் முதலில் ஆதரவு தெரிவித்த போதே இம்முறை நீங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்காய் குறைந்தது 12 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

23 March · 
மகிழ்ச்சி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் என்ற அறிவிப்பால் மனம் நிறைந்திருக்கிறது, சமுதாயம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.
முந்தைய மனக்குறைகளை இம்முறை நிறைவு செய்தும் நூற்றாண்டு கண்ட பேரியக்கத்திற்கு சிறப்பு செய்தும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், சந்தனத்தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது, தற்போதைய தலைவர் பேராசிரியர் போன்றோரின் நட்புக்கு பெருமை செய்தும் புதிய இலக்கணம் எழுதியிருக்கிறார் கலைஞர், பெருந்தன்மையோடு திமுக நடந்துகொண்டிருக்கிறது.
பெற்றுத்தந்த தாய்ச்சபைத் தலைவர் பேராசிரியர் உள்ளிட்ட குழுவினருக்கு மனம் நிறைந்த நெகிழ்ச்சிகள். ஐந்து பேரும் தமிழக சட்டமன்றத்திற்கு சென்று சமுதாய உரிமைகளை வென்றெடுப்பதற்கும், திமுக தலைமையில் புதிய ஆட்சி மலர்வதற்கும் உள்ளார்ந்த வாழ்த்துக்கள்.

23 March · 
சூடுபிடித்திருக்கிறது அரசியல் களம், தேர்தல் பன்முனைப்போட்டியிலிருந்து மும்முனைப்போட்டியாக மாறியிருக்கிறது. பிடித்திருக்கும் சூடு யாருக்கு தரித்திரம்... யாருக்கு சரித்திரம் என்பது போகப்போகத் தெரியும். பாஜக, பாமக, சிமான் கட்சிகள் தனித்து விடப்பட்டுள்ளது அவர்கள் இருக்கும் இடத்தையே காட்டுகிறது. தொடங்கட்டும் ஆட்டம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: