08 செப்டம்பர் 2011

மேகமே வழிவிடு நிலவுக்கு..!


கோபித்திருந்தவள்
கொஞ்சம்..கொஞ்சமாக
முகங்காட்டும் வேளை
முன் நின்று
முகம் மறைப்பதேனோ..?

தண்ணொளியோடு
தலைவனைத் தேடி
தனியே வருகிறாள்..!

மேகமே நீ
பெண்ணுரிமைக்கு
மதிப்புத் தந்தால்
வழி விடு!

பகல் முழுவதும் யோசித்து
பகலவன் மறைந்ததும் பனியுலகில்
முடிசூடிக் கொண்டவளாய்
மங்கள முகமாய் வருகிறாள்..!

சித்திரை நிலவு
நித்திரை கலக்கத்துடன்
முத்திரை பதித்தவனின் இதயத்தை
இத்தரையில் தேடி வருகிறாள்!



ஜே.எம்.பாட்ஷா
-இன்னும் புரியும்

2 கருத்துகள்:

Mahan.Thamesh சொன்னது…

அருமையாக உள்ளது .

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி திரு.தமேஷ்