பல்லவி:
ஸலவாத்தை அனுதினமும் ஓதியே புகழ்ந்திடுவோம்
அல்லாவின் அருளுண்டு அண்ணலாரின் ஆசியுண்டு
இணைப்பு:
சங்கைநபி பேரினிலே...
பொங்கும் இன்ப உளமுடனே...
அனுபல்லவி:
வல்லோனும் அவன் மலக்கும் சொல்லும் உயர் ஸலவாத்தை
எல்லோரும் ஓதிடுவோம் ஏற்றமெல்லாம் பெற்றிடுவோம்
சரணம்:
காதலராம் ஆதம்நபி கன்னிஹவ்வாவை கைப்பிடிக்க-முதல்
மகராகத்தந்த சிகரமதைச் சிறப்புடனே பகர்ந்திடுவோம்
போதகராய் வந்த எல்லாத் தூதரெல்லாம் துதித்துவந்த
தூயப்பொருளை இதயஅருளை நேயத்துடனே சுகித்திடுவோம்
சரித்திரங்கள் படைத்துவிட்ட
சஹாபாக்கள் யாவருமே
சதாநேரமும் சொல்லியவாரே சாந்த உருவினரை உவந்திடுவோம்!
போராட்ட வாழ்க்கையது அழகு தேரோட்டமாகிடவே-இறைவன்
பாரட்டும் நபிமீது சீராட்டைச் சாற்றிடுவோம்
வறுமையெனும் சூறாவளியில் சுழற்றியெறிந்து சுருளும்போது
மிடுமை நீங்கி மீண்டுவரவே அருமைநபியை பாடிடுவோம்
கண்ணீர் மழையில் கண்ணம் நனைந்தால்..
உள்ளக்குமுரலில் உயிரே சிதைந்தால்..
நல்லநேரம் பிறக்க வேண்டி நாயகரைப் போற்றிடுவோம்!
பாவமூட்டைச் சுமந்துக்கொண்டு தேவசமூகம் நிற்கும்போது-எதும்
தேவையற்ற ரஹ்மானின் தீர்க்கதரிசிக் காப்பற்ற,
கோபப்பார்வை வீழ்ந்திடாமல் கோபுரநயகர் நம்மீது
தாபப்பட்டு தலையுயர்த்தி தகையோன் சந்நிதி மன்றாட
மீஜான் தட்டில் நன்மை கணக்க
கொடிய பாலம் நொடியில் கடக்க
புகழின்கொடியில் நன்றே ஒதுங்க புகழானோரை புகழ்ந்திடுவோம்!
ஸலவாத்து: நபிகள் நாயகம் (ஸல்) மீது சொல்லப்படும் சோபனம்
-ஜே.எம்.பாட்ஷா
எழுதியது 2001
1 கருத்து:
கண்ணீர் மழையில் கண்ணம் நனைந்தால்..
உள்ளக்குமுரலில் உயிரேச்சிதைந்தால்..
நல்லநேரம் பிறக்க வேண்டி நாயகரைப் போற்றிடுவோம்! Aameen Masha Allah
கருத்துரையிடுக