07 டிசம்பர் 2014

மலர்ப்பாதையிலும் பூ நாகங்கள்

மலர்ப்பாதைகளின் திசையில்
பயணங்கள் தொடர்ந்தாலும்
அதிலும் கூட
பூ நாகங்கள் படமெடுன்றன.

****
கிளம்பும் முன் தான்
எந்தப் பூனையும் குறுக்கே வரவில்லையே
பிறகேன் அபசகும்.

****
அந்தக் கள்ளிச்செடியில்
ரோஜாப் பூவை
சொருகி வைத்ததுதான் யார்..?
பாம் பார்வையாளர்கள்!

****
கூவத்தின் சகதியை அள்ளி
சந்தனமென விற்கப்படும் நாளில்
நறுமணத்தின் வாசனைகள்
அவர்களின் இறந்தகாலத்தில்,
மனதிற்கு சுகம் தந்ததாய்
மூத்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

****

நாட்டு எலியொன்று
நானே சிம்மமென
சிகையலங்காரம் காட்டினால்
உலக வயிறு குலுங்குகிறது
சிரிப்பை அடக்க வகையறியாமல்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

4 கருத்துகள்:

Yembal Thajammul Mohammad சொன்னது…

Assalamu Alaikkum...

அன்பிற்கினிய அருமைத் தம்பி அவர்களுக்கு,

நான் நீங்கள் எழுதிய எல்லாக் கவிதைகளையும் படித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.எனினும் என் கவனத்திற்கு வந்தவற்றைப் படிக்கத் தவறியதில்லை.படிப்பேன்,ரசிப்பேன்;பாராட்ட வேண்டுமென நினைத்தாலும் கவனம் வேறேங்காவது சென்றுவிடும்.இன்று உங்கள் கவிதையைப் படித்தவுடன் -நீங்கள் எழுதி, நான் படித்த கீழே காணப்படும் `மலர்ப் பாதையிலும் பூநாகங்கள்’ என்ற கவிதை- நீங்கள் எழுதியவற்றுள் இதுவே சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன்;பராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் அழகு,கருத்தாழம்,கூர்மை ஆகியவற்றை என்னால் முடிந்தவரை புரிந்துகொண்டு ரசிக்கிறேன்.மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கத் தூண்டும்,சிந்திக்க வைக்கும் இந்தக் கவிதையை எழுதிய உங்களை மனமாரப் பாராட்டுகிறேன். தொடருங்கள்.உரிய நன்மைகள் அல்லாஹ்விடம் உள்ளன.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

அன்பிற்கினிய அண்ணன், சலாம்!
தங்களின் சிறப்பான பின்னூட்டமும், பாராட்டுக்களும் எனக்கு மிக மகிழ்வளித்தன. தாங்கள் திருத்திக்கொடுத்தது போல கவிதையையும் திருத்தி விடுகிறென். தங்களின் திருத்தங்கள் என்னை இன்னும் பாக்கியம் உடைவனாக ஆக்கியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

ஓரே ஒரு ஐயம், பெரும்பாலும் நாம் பாவம் என்று குறிப்பிடுகிறோம்.. ஆனால் ஒரு இலங்கையைச் சேர்ந்த நான் முன்பு குறிப்பிட்ட ஷைகவர்கள் தமிழில் நிறைய பாண்டித்தியம் பெற்றவர்கள் அவர்களின் நூலில் பாபம் என்றும், பாபமன்னிப்பு என்றுமே குறிப்பிடுகிறார்கள். எது சரி... பாபமா அல்லது பாவமா என விளக்குங்கள்.

Yembal Thajammul Mohammad சொன்னது…

அன்பிற்கினிய அருமைத் தம்பி அவர்களுக்கு,

தங்கள் பதிலுக்கு நன்றி.

பாபம்-வட சொல்>பாவம்-தற்பவம்-(தமிழ் வடிவம்)>கரிசு-பாவம் என்ற சொல்லுக்கு தூய தமிழ்ச் சொல்.பாவம் என்ற சொற்பயன்பாடு பரவலானது;எளிதில் புரிவது.பிழை எதுவுமில்லை.

வஸ்ஸலாம்

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

அற்புதமான பதில், நன்றி அண்ணன்.