இளைய
தென்றல்
இதமாக வீசுதே
பழைய ஞாபகம்
படமெடுத்து ஆடுதே!
என்னருகில் நீ இருந்த
அந்நாளய நினைவெல்லாம்
இந்நாள் நெஞ்சில் வந்து சேருதே!
ஒன்றாய் கூடி பேசித்திரிந்து
நன்றாய் இருந்த நாழிகைகள்
நறுஞ்சுவை அமுதம் வார்க்குதே!
உன் கோபத்தைக் கூட
ஒரு கோலமாய் தானடி பார்த்தேன்,
சாபம் இட்ட பொழுதுகளாய்
தாபம் தாங்காமல் தவித்த நாட்கள் – ஒரு
போதும் மறக்கத்தான் ஒன்னுமோ!
தலையணையாக மாறிய உன் மடிமீது
தலைவைத்து சில கீதம் இசைப்பேனே
அடியே! – உனக்கு நான்
பூ கொடுத்த நாட்களும்
நீ புன்னகை உதிர்த்த நேரமும்
நானுன்னை புரியாமல் தவித்த காலமும்
என்னால் மறக்க முடியாது (எழுதியது 4-4-1997 இரவு 10.35)
**************************************************************
அவளை
நினைத்து
எழுத
அமர்ந்தாள்
எழுதும்
கவிதைகூட
சில
சமயம்
உணர்ச்சி
வசப்பட்டு
ஒரு
முத்தம் கொடு
கொஞ்சம்
முந்தானைக்கொடு
எனக்கேட்குமோ
என அச்சப்படுகிறேன். (எழுதியது 21-4-1997)
-வழுத்தூர்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
மலரும் நினைவுகள் மனதிற்கு இதமாக .
மிக்க நன்றி சகோதரி சசிகலா!
கருத்துரையிடுக