பாதி
தூக்கத்தில்
தூங்கியும்
தூங்காமலும்
இப்போது
இங்கே
உட்கார்ந்திருக்கிறேன்
மனதில்
ஒன்றும் தோன்றவில்லை
இதை
எழுதுவதைத் தவிர
ஒன்றுமற்ற
வெள்ளைத்திரை
அடர்
கருப்ப்பாக இருக்கிறது
ஒரு
சிந்தனையும் இல்லாத
இப்போதைய
எந்தன் மனது
சற்று
நேரத்திற்கு பிறகான
சாயந்திரம்
நான் எப்படி இருப்பேன்
எதை
எதை எழுதுவேன்
என்றெல்லாம்
இப்போதே சொல்லிவிட முடியாது
இப்போது
என் மனம் வெற்றுத்திரை
பின்னால்
என்ன திரையில் ஓடும்
வெள்ளைத்திரை
வெள்ளித்திரையாகுமா
அப்போதைய
சனம் முடிவு செய்யட்டும் தானே.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
9/8/18 4.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக