தனிமரமாய்
தயவுகள் இல்லாமல்
காட்டுக்கருவறையில்
கடுந்தவம் புரிந்தாலும்..!
வாட்டும் வெயில் பனியில்
வதைத்து உடல் வெந்தாலும்..!
ஆட்டிப் படைத்திடும்
ஆண்டவனின் ஆணையின்றி
அணுவும் அசைந்திடுமோ..!
ஞனமது பிறந்திடுமோ..!
வானம் பூமி இவைதனிலே
ஆன உண்மை அறிந்தாயோ..?
வேண்டும் உனக்கிறைவன்
என்றால் நீ – மனம்
வேண்டுவதெல்லாம் விட்டுவிடு! -அவனை
காண்பதிலெல்லாம் தொட்டுவிடு!
ஆசையெல்லாம் ஆண்டவனே
பூசை உனக்கடா என்னிறைவா
மீசை தாடி வேசமில்லை,
தலைவர் முஹம்மதின் நேர்வழியும்
தகைமை முஹையத்தீன் மனவலியும்
முன்னேறிய முன்னோர்கள் முழுநிலையும்
முன்னவனே முழுமையும் தா!
கவர்ச்சியிலே கண் லயித்து
மலர்ச்சி இன்றி முகம் சோம்பி
பொருளுக்கு போட்டியிட்டு
காட்டிய வழி தவறி
மருவுணர்ந்து – மீண்டும்
கருவுக்கே நான் மீண்டேன்!
உள்ளதை உணரவேண்டும்
உள்ளாசை பிறந்ததடா..!
அல்லதை அகற்றி – நானும்
வல்லோனே உனைச் சேர
வழி வகேன்!. ஆமீன்.
(என இறைஞ்சு…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக