12 நவம்பர் 2011

குருட்டுக் குமுகாயம்




கடல் பயணம்

கட்டுமரம் இல்லாமல் எப்படி..?

துடுப்பும் படகும் இருப்பினும்

துடிப்புடன் செலுத்துநர் வேண்டும்

இயக்கம் மட்டுமல்ல – கடலினூடே

இசைவழியும் தெரியனும்

மாலுமி என்றொரு மகத்தான தலைவரை

மனதாலே எற்றாலே மகிழும் பயணம்

மணமாய் நிகழும் கடல்மேலே!


வான் வழித்தடத்தில் பறக்கத்தெரியாது

இறக்கை கட்டிக்கொண்டாலும் முடியாது

சீதோசனமும் சிக்கலை தரும்

அதற்கும் விமானம் வேண்டும்

எதற்கும் துணிந்த விமானியும் வேண்டும்

நீயும் நானும் நினைத்தால்

துளியும் நகராது – அவர்

துணையின்றி முடியாது

தலையில்லாமல் உடலேது!


தரைவழி பயணம் எனினும்

தடங்கள் தெரிந்திட்ட ஒருவர் வேண்டும்

கானகம் செல்ல நேர்ந்திட்டால்..

கட்டாயம் தெரிய வேண்டும் வேட்டை!

தூரப் பயணமானாலோ

நம்முடன் வாகனமும்

நயமுடன் இயக்க வல்லுநரும்

நலமே அனுபவம் கொண்டவரும் அவசியம்!


அந்த ஒருவர் யார்..?

கண்டு கொள்ள கண்ணின்றி..

கண்ட கண்டவன் பின்னே

என் சமுதாய கண்மணிகளின்

வழ்க்கைப் பயணங்கள்!!!



-ஜே.எம்.பாட்ஷா



குமுகாயம்: சமுதாயம்

கருத்துகள் இல்லை: