பல்லவி:
காத்தமுன் அன்பியா ஆனவரை
கலிமாவின் கருவாய் மிளிர்பவரை
உத்தம தோழர்கள் உயிர்த் தலைவரை
உண்மையாய் திண்ணமாய் புகழ்ந்தே பாடுவாய்!
இணைப்பு:
நெஞ்சமே..! முஃமின் நெஞ்சமே..!!
நெஞ்சமே..! முஃமின் நெஞ்சமே..!!
சரணங்கள்:
தினுல் இஸ்லாம் நெறியை
தீந்தேனாய் தந்த நபியை – உயர்
வேதம் அளித்த அழகை
வேந்தர்க்கு வேந்தர் அருளை
மாந்தர்க்கு உரைத்து மகிழ்ந்தே பாடுவாய்!
தாஹா நபியை இரசூலை
தாயிபில் உதிரம் உதிர்த்தவரை – பெரும்
வேதனைப் பொருந்திய சாதனையை
பொறுமைக் கடலை பெருமான் இரசூலை
பெருமையாக நெகிழ்ந்தே பாடுவாய்!
ஆதி முதல் ஜோதியின்
அற்புத மணம் வீசுதே – இம்
மேதினி மேலே எங்கிலும்
மென்மை தென்றல் காற்றிலே
கண்மணி நாதரை நுண்ணறிவாளரை
விண்ணுக்கும் மேலே வியந்தே பாடுவாய்!
எழுதியது 2001
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக