25 ஏப்ரல் 2012

பேச்சிலர்களே..''தீ'' கவனம்!



அலுவலகம் முடியும் ஐந்து மணிக்கெல்லாம் சீட்டை காலிபண்ணுபவன் நானில்லை, அதற்கு பிறகு தான் என் சார்ந்த கணிணி வேலைகளை சற்றே முடுக்கிவிட்டு ஆறஅமர இருந்து விட்டு பிறகு என் கீழ் தளம் நோக்கி வருவேன் மணி ஆறு அல்லது அதற்கு மேல். சில நேரம் ஒரே சூழலில் கணங்களை கழிப்பபதால் சற்றே மனம் களிப்புற ‘’பராக்’’கா கொஞ்சம் மற்ற சக தோழர்களை சற்றே ஐந்தாறு கி.மி களுக்கு அப்பால் விடும் வேன் டிரிப்-ல் ஏறி உலாவந்து மீண்டும் என் இடத்திற்கு திரும்புவது ஒரு சில நாளாய் நான் செய்துவருவது. இன்றைக்கும் அப்படி போய்விட்டு சற்றே அரைமணி நேரத்திற்குள என் தளம் வரும்போது அடுக்ககத்தின் கீழே பெருங்க்கூட்டம்.. உள்ளே உள்ளவர்களும், என் ''சைட்டில்'' வேலை செய்பவர்களும் வெளியே அன்னார்ந்து பார்த்து கொண்டிருந்ததை பார்க்க பகீல் என்றது, வேன் ஓட்டி ஒன்பதாம் அடுக்கில் அடுப்பில் யாரோ அசட்டையாக இருந்து விட்டனர் புகை தெரிகிறது என்றான்…!

ஆகா..நமது எல்லா முக்கிய வஸ்துக்களும் அங்கே தானே இருக்கிறது.. எல்லோரும் வேறு வெளியே நிற்கிறார்களே என இப்படி எண்ணிக் கொண்டிருந்த வேளை வேனை விட்டு கிழிறங்கி பார்த்தேன். ‘’அப்பாடா.. ஒன்பதாம் அடுக்கில் தீ கொண்ட அறையின் பால்கேனியின் கதவு திறக்கப்பட்டு புகைகள் வந்து ஓய்ந்து லேசாக வந்து கொண்டிருந்தது. மிகப்பெரும் தீ இல்லை இறைவன் தடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்! ஆனாலும் பயப்படும் படியான நிக்ழவு தான். இதற்கிடையே எனது எல்லா அலுவலக ஊழியர்களும் பத்தாம் அடுக்கிலிருந்து கீழ் நோக்கி பார்த்து போஸ் கொடுத்துக்கொண்டும்… சம்பந்த பட்டவர்களுக்கு போன் செய்து இருந்தனர். ஒரு பாதுகாப்பு கருவிகளும் சரிவர முறையாக இல்லாத அடுக்ககமாதலால் ஃபயரான பின்னும் லிஃப் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

ரிசப்சனுக்குள் வந்தேன்.. கதவடியில் நின்ற நாலு பேரை சற்றே தள்ளி கொண்டு ஒருவன் ‘’சைடு..சைடு..’’ என லிஃப்டுக்கு அருகில் ஓட பின்னால் வந்த பிற ஆட்களின் முகத்தில் ஈ-க்கும் ஆடாத எறும்பு-க்கும் ஆடாத பதட்டம் ‘’ டேய் மொதல்ல போங்கடா..ச்சே..ச்சே..’’ என்ற ஆதங்கங்களை கொட்டி மேலே விரைந்தனர். பிறகு தான் தெரிந்தது எனக்கும்.. எல்லாருக்கும்... இது நமது தமிழகத்தின் பிரபல மூன்றெழுத்து கம்பெனி ஆட்கள் தங்கியிருக்கும் தமிழ் அறை என. பிறகு அவர்கள் போய் மேலும் புகையை களைத்து அங்கிருந்த ஃபயர் எக்ஸின்குஸைரை பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்ஸைடை பரப்பி ஒருவழியாய் பதட்டத்துடன் பயம் களைந்திருக்கிறார்கள், நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.

எத்தனை மணியிலிருந்து இப்படி ஆனது.. எப்படி ஆனது.. என்ன சமாச்சாரம் என்றெல்லாம் தெரியவில்லை, வெளியே அச்சமடைந்து நின்றிருந்த அடுக்ககவாசிகள் ஒருவருக்கொருவர் இதைப்பற்றி ''இப்படி ஆயுடுச்சே.. என்ன பசங்க இவங்க.. இவ்வளவு அஜாக்கிரதையா'' என பேசியும், ஏசியும் மீண்டும் ரிசப்சனிலும், கட்டிடம் எங்கிலும் இருந்த புகை வாடையை நுகர்ந்து பயந்தவாறே கட்டிடத்தின் உள்ளே சென்றனர், அதே நேரம்… மற்ற பேச்சிலர்கள் ''இப்படி தானே நாமும் பலமுறை அசால்ட்டாக இருந்திருக்கிறொம் நல்ல வேலை இது போல் நடக்கவில்லை!'' என மனதுக்குள் சமாதானம் ஆகி இனி கொஞ்சம் விழிப்போடு இருக்கனும் என்று அவர்களும் சென்றர். பகலில் நடந்ததால் புகையை கண்டு உடன் எல்லாம் பாதுபாப்பு பெற்றனர். இறைவன் காப்பாற்றினான்!

பொதுவாக எல்லா பேச்சிலர்கள் தங்கி இருக்கும் தளங்களிலும் இது நடக்க பல வாய்ப்பிருக்கிறது ஏனென்றால் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அவர் பார்க்கட்டும் இவர் பார்க்கட்டும் அல்லது நம் வேலை முடிந்துவிட்டது இனி ஏன் நாம் செய்யவேண்டும் என்ற மனநிலை அதிகம் இருக்கும் மேலும் சோம்பல் சொல்லவே வேண்டாம்!. ஒருவரின் அசட்டையால் அவர் மட்டுமல்ல மொத்த கட்டிடத்தில் இருக்கும் அத்தனை ஆண், பெண், குழந்தைகள் உயிர், உடைமை என எல்லாவற்றிற்கும் தீங்கு நேர வாய்ப்புண்டு.ஆதாலால் அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் இவைகளில் கவனம் எடுத்து நாட்களை பாதுபாப்புடன் நமது கனவுப் பயணம் நோக்கி நகர்த்துவோம்.

பேச்சிலர் நண்பர்களே.. அடுக்ககத்தில் வசிப்பவர்க்ளே கவனமாக இருந்து கொள்வோம். இடர்தனை தவிர்போம். இறைவன் என்றும் பாதுகாப்பு அருளட்டும்.



வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: