13 ஜூலை 2011

சூனியம்



மனிதன் பிறந்ததிலிருந்தே

தேடிக்கொண்டே இருக்கிறான்

தேடிக்கொண்டே இருக்கிறான் - அதனால்

ஓடிக்கொண்டே இருக்கிறான்

ஓடிக்கொண்டே இருக்கிறான்..!


இந்த தினச் சுழற்சி

வாழ்வின் எதார்த்தத்தை

நெருங்குவதிலிருந்தும் கூட - அவனை

விலக்கியே வைத்துவிட்டது.


வேகம் குறைந்து

ஓடிய கால்கள்

ஓரிடத்தில் நிற்கும்போது தான்

வெற்று வாழ்க்கையின்

விலாசம் விளங்கும்.


தேடுதலும் பொய்

ஓடுதலும் பொய்

வாழ்ந்த வாழ்வின்

மொத்தக்கூடுதல் இலக்கம்

சூன்யமே!


தலினால் மானிட‌ர்காள்..!

சூனியமாய் இருங்கள்.


பிறப்பின் தொடக்கம்

சூன்யமே!

இறக்கும் போதும்

சூனியத்தில் சூனியமாக வேண்டும்.


தேவையில்லாத

மாய இலக்கங்கள்

மாய்ந்து போகாதிருந்தால்...!


நாம்

மாய்ந்து போன பிறகும் - நம்

சூன்ய ஆன்மா

சுமைதாங்கி கஷ்டப்படும்


கவனம்!


- ஜே.எம்.பாட்ஷா

எழுதிய காலம் 26-12-2007 மாலை 6.45 மணி


சூனியம்: இல்லாமை அல்லது ஒன்றும் அற்றது

1 கருத்து:

Abdul Hadi Paroshan சொன்னது…

விரும்பி படித்தேன் விலாசம் விளக்கம்.. நன்றி..Abdul Hadi Paroshan