மாறி மாறி குற்றச்சாட்டு கஜானா காலி!
அடகுக்கடைக்கு போயாச்சு குடிமகளின் தாலி!
மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் ஓட்டுப்போடக் கேட்டு!
நமக்கு நாமே வைத்துக் கொண்டோம் தமிழா வேட்டு!
சாகடிச்சு சாகடிச்சு ஆடுராங்க ஆட்டம்!
நோகடிச்சு நோகடிச்சு பாடுராங்க பாட்டும்!
நடுதர வர்க்கமெல்லாம் நடுரோட்டுக்கு வந்தாச்சு!
படுத்துர பாட்டை எண்ணி முழிபிதுங்கி நின்னாச்சு!
எங்க எலவெடுத்து கொடுப்பாங்களாம் இலவசாய்!
அரசாங்கம் கொடுத்தாக வாங்கிகனுமாம் பரவசாய்!
ஆளுக்கொரு சேனல் வச்சு அரசியல் போர் நடத்துராங்க!
ஐய்யோ அகப்பட்டுக்கொண்டதோ நானும் நீனும் தாங்கோ!
செத்துப்போன நாமத்தெல்லாம் வாழவக்கிறாங்க!
எங்கள சாகடிச்சு நாமமாக்க வழிப்பண்ணுராங்க!
மானியத்த கொடுக்கலயாம் மத்திய அரசு! - கட்டிய
மடிக் கோவணத்தை பிடுங்குதடா மாநில அரசு!
ஊருக்கெல்லாம் போயிவந்த பேருந்து கட்டணம்!
இப்போ போகமட்டும் கொடுக்கனுமாம் குப்பனும்!
திட்டங்களால் வயித்துல பால் வாக்க வேணாம்! - குறைந்த பட்சம்
திட்டமிட்டு சனங்களுக்கு பால் ஊத்த வேணாம்
பழைய ஆட்சி செய்ததெல்லாம் இவங்களுக்கு விசமாம்!
பழாப்போன அரசே! பல குடும்பத்துல குடிக்கிறானே நெசமா!
சட்டசபைய பூட்டு..!
பாடத்திட்டம் மாத்து..!
நூலகத்த சாத்து..!
விலைவாசி ஏத்து!
இப்ப்பூடி.. அடிக்கிறாங்க கூத்து..!
போராட்டத்தால் நீ எதிர்த்தாலும் ஆள்பவர்கள் பழகிட்டாங்க பாத்து..!
அரைமணி நேரம் சிறையில் வச்சு விட்டுடுவாங்க எல்லோரையும் சேத்து..!
கொள்கையே இல்லையின்னாலும் கொடிபிடிப்போம்!
கொள்கை கெட்டவர்களுக்காவே நாம் அணிவகுப்போம்!
அடுத்த தேர்தலிலும் அமர வைப்போம்!
செத்த எல்லா நாமங்களும் வாழ்க!!!!!!!
- ஜா.முஹையத்தீன் பாட்சா
5 கருத்துகள்:
வயிற்றெரிச்சலை சொல்லும் வரிகள் அருமை---- இரா.அருள்நம்பி.
அம்மா வந்தாச்சு ...அய்யம்பேட்டையில் கரண்டே போகலன்னு சொன்னாங்க....... நேத்து நியூஸ் அய்யம்பேட்டையில் ஒரு நாளைக்கு 5 தடவை கரண்டு போறதா தகவல்.....அப்படின்ன ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னது.......அது வேற வாய்......இது நாற வாய்...................
பெருபான்மையான வெற்றி கண்ணை மூடிவிட்டது ஓட்டு பொருக்கிகள் மக்கள் நலனை ஒருபோதும் அக்கரைகொள்ளமாட்டார்கள்...
வினை விதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான்... சரியான எதிர்க்கட்சி இல்லாமஆக்குனிங்க இல்ல...... நல்ல அவஸ்தை படுங்க... இன்னும் நாலரை வருசத்துக்கு இந்த ஏழரைதான்...
இதற்காக இன்னும் நாலரை வருடம் காத்திருப்போம்
கருத்துரையிடுக