பழசா இருந்த தெருவெல்லாம் புதுசா
மாறி நிக்கும்.. பசங்லோட பட்டாலமே சேர்ந்து ஒன்னா தெருவ கூட்டி.. சுத்தம் செஞ்சு.. சுண்ணாம்பு தூவி.. ரெண்டு நாள் ராத்திரி எல்லாம் தூங்காம கலர் தாள் எல்லாம் தோரணமா ஒட்டி தெருவு பூறா தொங்கவுட்டு ஒரே ஜக ஜோதியா இருக்கும்.. பாக்கரத்துக்கே ஒரு ரம்மியம் அதுவும் எல்லாம் முடிஞ்சு இந்த ஏற்பாடலெல்லாம் பண்ணுன அந்த பெருநாள்.. உள்ளூர் திருவிழா.. வந்தாளோ அப்பப்பா சும்மா தூளா இருக்கும். இது எங்க தஞ்சை மாவட்டம், வழுத்தூர்ல நடக்கும் ‘கொடிசீலை’ ன்னு அழைக்கப்படும் மாபெரும் தவசீலர் ஞானமகான் மெய்நிலை கண்ட ஞானி முஹையத்தீன் ஆண்டவர்களின் நினைவு தினமானாலும் சரி, இன்று சாலைத்தெருல நடக்க இருக்கும்.. (சில நூற்றாண்டுகளாக நடந்து வரும்.. ஆத்மீக ஞானி.. இறைசிந்தனையிலேயே தங்களை ஆக்கிக்கொண்டு ஆன்ம பலம் பெற்று பலர் இன்னல் தீர்த்துக்கொண்டிருக்கும்) மகான்.மஸ்தான் சாஹிப் அவங்களோட நினைவு தின கொண்டாட்டமானாலும் சரி அப்படித்தான் ரொம்பவே அலங்காரமா இருக்கும்.
அந்த நாள் எப்ப வருதுண்ணே.. எதிர் பாத்து எல்லாரும் வருவாங்க.. சொந்தபந்தமெல்லா ஒண்ணா சோரும்.. குழந்தைகளுக்கா சொல்லவே வேணாம் தெருவுல போட்டுருக்குற கடையில வெளயாட்டு சாமான்கள கேட்டு அடம் பண்ணுவாங்க.. சவ்வு முட்டாயி..பஜ்ஜி எல்லா வாங்கி கேப்பாங்க.. சுத்துற ராட்டுனத்துல ஆடித்தான் ஆவேன்னு விடமாட்டாங்க.. அவஙகளுக்கெல்லா ஒரே ஜாலி தாங்க.. அப்பறம் எல்லா பிரன்ஸும் சேந்து நல்ல டிரஸ் பண்ணிகிட்டு ஹந்தூரில போய் கலந்துக்குவாங்க… ஊரே கூடி நிக்கும், சாதி மதமெல்லா பாக்காம அந்த பாத்திஹாவுல (பிரார்த்தனை) எல்லா ஜனங்களும் அண்ணன் தம்பியா.. சகோதர வாஞ்சையோடு வருவாங்க.. பெரிய அளவுல சோறு பகிர்வு (அண்ணதானம்) நடக்கும்.. பல ஊர்லேந்து வரும் எல்லா ஏழைகளும் சந்தோசமா சோத்த வாங்கிகிட்டு வயிறாற சாப்பிட்டு போவாங்க.. இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.. அன்று முழுவதும் ஒரே சந்தோசம்.. உற்சாகம்.. ஆக்கிரமித்து இருக்கும்.. மனசெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்.. இது வெல்லாம் ஏன் நாம தொன்று தொட்டு காலங்காலமா கொண்ண்டாட வச்சாங்க..கொண்டாடுரோ அப்படீண்ணா..
வாழ்நாளில் இதுவெல்லாம் வசந்த காலங்கள்.. இவைகளை முன்னிட்டு நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக்கி கொள்கிறோம் இது போன்ற சுப தினங்கள் எல்லாம் வராது போனால் வாழ்வே வறட்சியாகிவிடும்.. குறிப்பாக குழந்தைகளுக்கு மனதளவில் பெரிய புத்துணர்வு.. அந்த ஞாபங்களை சொல்லி.. சொல்லியும், அடுத்த பெருநாளில் நான் அதை வாங்குவேன்.. இப்படி தொட்டி ஆடுவேன் என்றெல்லாம் சுவையாக எண்ணி பார்ப்பார்கள், மனோதத்துவ ரீதியில் இவைகளெல்லாம் நம்மில் பெரிய காரியங்களை ஆற்றுகின்றன.
இது போன்ற நன்னாட்களில் எல்லோரும் பகைமையை எல்லாம் மறந்து எல்லோரும் ஒன்று கூடுகின்றனர், சமுதாய ஐக்கியம் உருவாகும்.. பலதரப்பட்ட சமூக மக்களும் ஒன்று கூடி கொண்டாடுவதால் மாச்சர்யங்களுக்கு இங்கே சாவு மணி அடிக்கப்படுகிறது ஆக இதுவெல்லாம் ஒரு மகானின் நினைவு நாள் கொண்டாட்டத்தினால் நடைபெறுபவைகள்.. இவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இது போன்ற மகான்களை ஏன் கொண்டாட வைத்தார்கள் மடையர்கள்... நமக்கு முன்னால் உள்ளவர்கள் எல்லாருமே முட்டாள்கள்.. நாம் மட்டுமே தலை பொத்துகொண்டு வழிய.. வழிய அறிவுடையவர்கள் என்று யாரும் நினைதால் அது மிகத்தவறு.
ஏன் இவர்களை கொண்டாடவைத்தார்கள் என்றால் அதில் மேற்சொன்னவைகளோடு இன்னும் பல காரணங்கள் அடங்கி இருக்கின்றது. மனிதர்கள் எல்லோரையும் கொண்டாடி விடுவதில்லை, எத்தனை எத்தனையோ புகழ்மிக்க அரசர்கள் இருந்து நல்லாட்சி செய்தார்கள் அவர்களின் செத்த நாள்.. அல்லது பிறந்த நாள்.. என யாராவது கொண்டாடுகிறார்களா.. இல்லை இந்திய மண்ணை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட மொகலார்களில் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும் தந்த ஷாஜகான் போன்றவர்களைத்தான் கொண்டாடினார்களா..இல்லை அவர்களெல்லாம் அவர்கள் காலத்தோடு சரி அரசியல் உலகில் இப்பொழுதுள்ள டிரண்டில் பல தலைவர்களை கொண்டாடி கொண்டு இருக்கிறார்களே என்றால் இதுவெல்லாம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்குமா.. அந்த போட்டோக்கள்.. போஸடர்கள் எல்லாம் தொடருமா.. நாமங்கள் எல்லாம் வாழுமா என்றால் உண்மையில் சொற்பகாலத்திலேயே அவைகளுக்கெல்லாம் நாமங்கள் தான்.
ஆனால் நம் மண்ணில் மகான்கள் பன்னூற்றாண்டுகளாக இன்னும் சிலர் ஆயிரம் வருடகாலங்களை தாண்டியும் நினைக்கப்படுகிறார்கள் என்றால்.. மதிக்கப்படுகிறார்கள் என்றால்.. அவர்களை மக்கள் எல்லோரும் ஜாதி.. மத.. இன.. பாகுபாடின்றி போற்றுகின்றார்கள், கொண்டாடி மகிழ்கின்றார்கள் என்றால் அவர்கள் மனித சமூகத்திற்கு ஆற்றிய காரியங்கள் அத்தனை வீரியமிக்கவை என்பதால் தான்..! முக்கியமாக இறைநெறியை தானும் பின்பற்றி அவர்கள் தவறாது பின்பற்ற செய்ததில் லவ்ஹீக மற்றும் ஆன்மீகத்தில் (இம்மை மற்றும் மறுமை) மக்கள் அடைந்த பயன்.. இறைசிந்தனையிலேயே அவர்கள் மூழ்கி அவர்கள் இறைவனுக்கு மிக நெருங்கங்கொண்டதால் அவர்களின் தத்துவ முத்துக்களில் மானிட சமுதாயம் கண்ட தெளிவு அதனால் ஆன அறிவின் விசாலம்..ஆன்ம சாந்தி.. நிம்மதி.. நிறைவு..! அந்த மகான்கள் கற்றுக்கொடுத்த நல்லியல்புகள்.. பண்பாடுகள்.. செயல்முறைகள்.. இவைவக்ளெல்லாம் அந்த சமூகத்திற்கு கொடுத்த பலம். உள்ள உறுதி.. இவ்வாறெல்லாம் இறையவனின் மார்க்கத்தை.. இனிய தூதரின் வழிமுறையை அம்மகான்களிடமிருந்து பெற்றுக்கொண்டதால் அவர்களுக்கு நன்றி செலுத்தும் உணர்வோடு அவர்களை கொண்டாடினர்.. கொண்டாடுகின்றனர்.. நல்லோர்கள் இருக்கும் காலமெல்லாம் கொண்டாடப்படுவர்.
இவைகளெல்லாம் மிகப்பிரபல்யமாக.. எல்லா இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டாடிய காலங்களில் சமூகத்தினுள் சச்சரவுகள் இல்லை.. போலிஸ் நுழையவில்லை.. சிறைச்சலையில் எத்தனை எத்தனையோ இளைஞர்கள் பல வருடங்களாக முடக்கப்பட்டு குடும்பங்கள் சீரழியவில்லை.. முஸ்லீம்களை அந்த பட்டம்.. இந்த பட்டம் கொண்டெல்லாம் யாரும் அழைக்கவில்லை.. எல்லா சமூகத்தாருடனும் மிக நெருக்கத்துடன் மதித்து.. மதிப்பு பெற்று வாழ்ந்தார்கள்.. சிறுவர்கள் முதல் இளைஞர்கள், முதியோர்கள் என மூளைசலவை செய்யப்பட்டு ஏற்படும் கருத்து முரண்பாடுகள்.. அடிதடிகள் நடக்கவில்லை.. சுருக்கமாக சொல்லப்போனால் நான் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு யாரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு கிணற்று தவளையாய் பெருமை அடித்துக்கொண்டிருக்கவில்லை.. எல்லோரையும் மதித்தார்கள்.. பொறுமையும் அமைதியும் இருந்தது, அன்பு சூழ்ந்திருந்தது, மொத்தத்தில் எல்லாம் நல்லாவாழ்வு வாழ்ந்தார்கள். இதற்கு காரணம் பெரியோர்களை மதித்தார்கள்.. பெருவாழ்வு கண்டார்கள். இறையருள் நிறைந்த வாழ்வை வாழ்ந்தார்கள்.
இந்தியா தத்துவங்கள் நிறைந்த நாடு.. தத்துவ ஞானிகள் செழித்த நாடு.. ஆகையால் தான் இஸ்லாம் தோன்றிய அந்த நூற்றாண்டிலேயே இந்திய மக்கள் அதை ஏற்று வரவேற்றனர். அனால் இருபத்திரண்டு ஆண்டுகள் வரை படிப்பில் கவனம் செலுத்தி பின்பு பணம் சம்பாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் இளைஞர்களுக்கு தத்துவ ஆராய்ச்சிக்கோ… திறந்து பட்ட சிந்தனைக்கோ.. விசாலமான அறிவு தேடுதலுக்கோ சரியான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் போகிறபோக்கில் யார்.. யாருடையவோ சிந்தனையில் சவாரி செய்வதினால் வரும் கேடு.. அயல்நாட்டு சதியில் சிக்குண்ட சம்பாத்தயம் செய்யப்போன நாடுகளின் அழிவுக்கு அடிகோலிடும் கொள்கைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் ஏற்பட்ட தகறாறு.. இவைகளுக்கெல்லாம் மேல் முறையான வரலாற்று ஆராய்ச்சி அறிவு பெறாதது இவைகளெல்லாம் சேர்ந்து தான் தரித்திரமாய் சுற்றிக்கொண்டு இன்றைய இஸ்லாமிய இளைய சமூகத்தை ஆட்டிபடைக்கிறது..ஆக இந்நிலை மாற வேண்டும்.. புதிய அறிவு பரிணாமம் எட்டப்பட வேண்டும்..சந்தோசப் பெருவாழ்வு வாழப்படவேண்டும் என்றே என் இளைய தோழமைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இது என் சிந்தனையின் பதிவே.. மற்றபடி அவரவர்களின் மனவிருப்பமும்..முடிவெடுத்தலுமே அவர்களை வழிநடத்தட்டும்.
18 கருத்துகள்:
nice article congrats
பழைய நினைவுகளை அசை போட வைத்துள்ளார்கள் அண்ணன் அவர்கள் ஆம் உண்மைதான் எனக்கு தெரிந்து ஈத் பெருநாளில் தொழுகை முடிந்தவுடன் பெருநாள் முடிந்ததை போல் இருக்கும் ஆனால் வழுத்தூர் வாசிகளுக்கோ கொடிசீலை என்றால் உற்சாகமும் ஒரு மாதத்திற்க்கு முன்பே எப்ப வரும் என்று எதிர்பார்த்து அன்றைய தினம் அடைந்த சந்தோசத்திற்க்கு எல்லையே இல்லை ரொம்ப நன்றி ஒரு சின்ன விண்ணப்பம் அந்த காலத்தில் வழுத்தூர் வாசிகள் எப்படி இருந்தார்கள் என்று எழுதினால் உள்ளுர் மற்றும் வெளியூர் வாசிகள் அறிந்து கொள்வார்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கொம்..........
Dearest RMMB,
you have taken to the spot and also real golden days of old.Yes ,what you have written in your lanuage is just superb!You just missed scout boys who control the crowd in those days.
Hope taht the same Spirit still prevails in valoothoor .Still the hearing of Fakir's drum,songs,and crowd are in the mind and you have brought all.
Congrats and keep writing on such subjects!May Allah bless you!
உண்மையான விஷயங்களை எளிதாக புரியும் விதத்தில் நெஞ்சை தொடுகின்றது.ஆழமாக சிந்திக்க வைத்து விட்டது இந்த கட்டுரை...!அன்புடன் அப்துல் ரஹ்மான்,அபுதாபி.
அன்பு சகோதரர் ரஹ்மதுல்லா அவர்களுக்கும், என் அபுதாபி வாழ்வில் ஆருதல் தளமாக விளங்கிய இயக்க நன்னெஞ்சர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் என் இனிய நன்றிகள்
extremely good!Admired and appreciated.
Thanks Eng.Iqbal uncle
உங்கள் கட்டுரை என்னை இளைஞனாக்கி அந்த கால நினைவுகளில் சிறகடிக்க வைத்துவிட்டது. வாழ்த்துக்கள்!
இதை படித்தவுடன் எங்கள் ஊர் ஜெல்ஸா (பட்டமளிப்பு விழா) ஞாபகம் எனக்கு வந்து விட்டது
dear thambi mohideen batcha,i am really excited and energised on seeing ur article on masthan shahib rali urus.u not only revealed the importance of the occasion,description and holiness of masthan shahib rali and also brought out our delight and excitement that house in our heart over this occasion....u really have taken me to my childhood and my young dynamid days...keep on writing such articles in the sense to refresh and rejuvanate us.....our support and prayers for u ever thambi....wassalam.....MJARAVOOF
@ Ravoof Uncle :As i know, You are the one who is always enjoying and recalling the (G)olden memories and thank you for your valuable comments
அந்த கால நினைவுகளில் சிறகடித்து பறக்கவிட்டுவிட்டது என பாராட்டிய என் மாமனார் பெருந்தகைக்கு அன்பின் நன்றிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லஹி வ பறக்காது ஹு
தங்களின் கட்டுரை
மஹான் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்
மிக மிக அருமை
zazakallah hairah
வரிகளை சுருக்கி இருக்கலாம்
ரொம்ப நீளமாக தெரிகிறது .
அதில் எனக்கு பிடித்த வரிகள்
ஏன் இவர்களை கொண்டாடவைத்தார்கள் என்றால் அதில் மேற்சொன்னவைகளோடு இன்னும் பல காரணங்கள் அடங்கி இருக்கின்றது. மனிதர்கள் எல்லோரையும் கொண்டாடி விடுவதில்லை, எத்தனை எத்தனையோ புகழ்மிக்க அரசர்கள் இருந்து நல்லாட்சி செய்தார்கள் அவர்களின் செத்த நாள்.. அல்லது பிறந்த நாள்.. என யாராவது கொண்டாடுகிறார்களா.. இல்லை இந்திய மண்ணை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட மொகலார்களில் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும் தந்த ஷாஜகான் போன்றவர்களைத்தான் கொண்டாடினார்களா..இல்லை .
இவைகளெல்லாம் மிகப்பிரபல்யமாக.. எல்லா இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டாடிய காலங்களில் சமூகத்தினுள் சச்சரவுகள் இல்லை.
இந்தியா தத்துவங்கள் நிறைந்த நாடு.. தத்துவ ஞானிகள் செழித்த நாடு.. ஆகையால் தான் இஸ்லாம் தோன்றிய அந்த நூற்றாண்டிலேயே இந்திய மக்கள் அதை ஏற்று வரவேற்றனர். அனால் இருபத்திரண்டு ஆண்டுகள் வரை படிப்பில் கவனம் செலுத்தி பின்பு பணம் சம்பாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் இளைஞர்களுக்கு தத்துவ ஆராய்ச்சிக்கோ… திறந்து பட்ட சிந்தனைக்கோ.. விசாலமான அறிவு தேடுதலுக்கோ சரியான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில்
அயல்நாட்டு சதியில் சிக்குண்ட சம்பாத்தயம் செய்யப்போன நாடுகளின் அழிவுக்கு அடிகோலிடும் கொள்கைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் ஏற்பட்ட தகறாறு.. இவைகளுக்கெல்லாம் மேல் முறையான வரலாற்று ஆராய்ச்சி அறிவு பெறாதது இவைகளெல்லாம் சேர்ந்து தான் தரித்திரமாய் சுற்றிக்கொண்டு இன்றைய இஸ்லாமிய இளைய சமூகத்தை ஆட்டிபடைக்கிறது..ஆக இந்நிலை மாற வேண்டும்..
தொடரட்டும் உங்கள் பனி
வாழ்த்துக்கள்
துவா
வஸ்ஸலாம் --
Kamarudeen
@ Kamarudeen
கருத்துரை இட்டமைக்கும் பாராட்டியமைக்கும் என் இதய நன்றிகள்
@ miskinsha.blogspot.com ; நன்றி தம்பி கருத்தக்கள் அருமை
இதை படித்தவுடன் எங்கள் ஊரில் நடப்பதை நினைவுப்படுத்துகிறது.
Good one....
very big work nanri.
கருத்துரையிடுக