22 ஜூலை 2011

ஒப்பாரி அரசியல்...
வானத்தில் மேகக்கூட்டம் இலக்கில்லாமல் தவழ்கிறது..

மோகன இறக்கைகளை விசிறியே வண்டுகள் மலர்களில் தேனெடுக்கிறது..


கிளைகொண்ட மரங்ககளில் கிளிக்கூட்டங்கள் பேடைகளுடன் கிளுகிளுக்கிறது..

நிலைமறந்து சோலைகளில் காதலர்கள் மாய மயக்கத்தில் குறுகுறுக்கின்றனர்..


எறும்புகள் ஓரமாய் உணவு சுமந்து சாரை சாரையாய் சுறுசுறுக்கிறது..

ஓடைகள் ரம்ய பாஷை பேசி ஊர்ந்து சிலுசிலுக்கிறது..


புல்வெளியில் ஆடுகள் வேக வேகமாய் புற்களை மேய்கிறது..

மரம் விட்டு மரம் அணில்கள் ஆரவாரமாய் தவுகின்றது..


சிட்டுக்குருவிகள் என்வீட்டு முற்றம் வந்து செல்கின்றது..

கிட்டிப்பிள்ளைகளை கெட்டித்தனமாய் சிறுவர்கள் ஆடுகின்றனர் தெருவில்..


எல்லாவற்றிலும் நிஜத்தில் அமைதி...!


ஏன் இவர்கள் மட்டும்

மதமாச்சர்யங்களை கிளர்ந்தெழ செய்தும்..

சாதி அரசியல் என்றபெயராலும்

பழைய ஒற்றுமைகளை புதைத்தும்

வரலாற்றினை மீண்டும்..மீண்டும்..

வஞ்சம் கொண்டு சிதைத்தும்..

அமைதியை முற்றும் கெடுத்து,

இரத்தத்தை புசித்து பசி போக்கி..

ஒப்பாரியை ரசித்து இன்பமெய்தி

வாழ்வு நடத்துகின்றனர்


ஐயகோ! இவர்களெல்லாம் ஆட்சியாளர்களாம்..!

மக்களை கொல்வதும் மக்களுக்காகத்தானோ..?-ஜே.எம்.பாட்ஷா


8-4-1997 1 மணி நண்பகல்


-இன்னும் புரியும்

3 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அருமையான கவிதை....
வாழ்த்துக்கள்..

வலையகம் சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

jmbatcha சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே!